Friday, July 17, 2009
கடிதம் முதல் கடைசி வரை.....
நீட்டிய கடிதத்தின்
நீளம் குறைவுதான் என்றாலும்
காரமோ, காரணமோ குறையில்லை.
பெற்றுக்கொள்ளா நீயும்
அதை பேணிப்பாதுகாக்கும் நானும்
இன்றுவரை அவிழ்த்துகொள்ளாமல்
இருக்கிறோம் நம் மனம் கட்டிய
ஆடைகளை.
உனக்கு தெரிந்திருக்க வாய்பில்லைதான்
நான் கொடுத்தது கடிதம் இல்லை என்று.
ஆம் அதை ஒரு கடிதம் எனும்
கடினமான வாக்கியங்களில்
அடைக்க விரும்பாத எனக்கு அது....
அது இல்லைதான்.
வாங்காத நீயும், வைத்திருந்த நானும்
வஞ்சிக்கப்படுகிறோம் என்று மட்டும்
ஒரு உணர்வுகொண்டேன்.
பார்க்காத உன் பார்வையில்
நானிருக்க வேண்டுமென்று
வேண்டிக்கொண்டது என் சுயநலம்.
நீ பார்ப்பது என்னைதான்
என்று நானறிந்து நான் கண்டதில்லை.
ஒன்றுமில்லா ஒன்றை ஊதி
பெரிதாக்கும் உன் கண்களைபோல
எதுவுமில்லா உன் பார்வையில்
கசிந்தொழுகும் காதல் இருப்பதாய்
நண்பன் கூற நாசமாய் போனேன்.
நாணல் வளைவது
நாணத்தால் அல்ல,
அதை தாண்டிச்செல்லும்
தண்ணீரால் என்று அறிவுகொண்டேன்.
உன்னை படைத்தவன்
வேண்டுமானால் காவியன் ஆகியிருக்கலாம்.
ஆனால், உன்னை நினைத்தவன்,
இன்று நினைவழிந்த ‘காவி’யனாக
மனதை மட்டும்
விட்டுசெல்கிறேன்.
பார்த்துக்கொள் எதற்கும் பயன்படாமல்...
••••••
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
/நீட்டிய கடிதத்தின்
நீளம் குறைவுதான் என்றாலும்
காரமோ, காரணமோ குறையில்லை.
பெற்றுக்கொள்ளா நீயும்
அதை பேணிப்பாதுகாக்கும் நானும்
இன்றுவரை அவிழ்த்துகொள்ளாமல்
இருக்கிறோம் நம் மனம் கட்டிய
ஆடைகளை//
நல்லாருக்கு பாலாஜி..
//நாணல் வளைவது
நாணத்தால் அல்ல,
அதை தாண்டிச்செல்லும்
தண்ணீரால் என்று அறிவுகொண்டேன்.//
பாலாஜி.. அற்புதமான வரிகள்
கவிதை முழுவதுமே கனமாக இருக்கிறது..
இன்னும் நிறைய எழுதுங்கள்
என்ன நடக்குது?
இதென்ன த.ம.பி. அவர்களை சொல்லி விட்டு இங்கு ஒரு காதல் காவியம் அரங்கேறுது. கவிதை அருமை. அதிலும் அந்த புகைப்படம் மிக அருமை.
எல்லோருக்கும் வாழ்வில் ஒரு முறையாவது இப்படி ஒரு அனுபவம் - காதலியிடம் இருக்கலாம், நண்பனிடம் இருக்கலாம், உறவினரிடம் இருக்கலாம், உடன் பணிபுரிந்தவர்கலாகக்கூட இருக்கலாம் - கண்டிப்பாக இருந்திருக்கும்.
ஈரக்குலையை பிய்த்தெடுததுபோல் உணர்ந்த நேரங்கள் எமக்கும் உண்டு.
ஆனாலும் எல்லாம் கடந்து போவோம்.
Cable Sankar said...
//நல்லாருக்கு பாலாஜி..//
நன்றிங்க சார், தங்களின் வருகைக்கு.
கதிர் said...
//பாலாஜி.. அற்புதமான வரிகள்
கவிதை முழுவதுமே கனமாக இருக்கிறது..
இன்னும் நிறைய எழுதுங்கள்//
நன்றிங்க சார், தங்களின் வருகைக்கும் கருத்திற்கும், எனது முயற்சிகளில் தடங்கல் வராமல் இருந்தால் தொடர்ந்து எழுதுவேன். நன்றி.
Sadagopal Muralidharan said...
//என்ன நடக்குது?
இதென்ன த.ம.பி. அவர்களை சொல்லி விட்டு இங்கு ஒரு காதல் காவியம் அரங்கேறுது.//
பூவுடன் சேர்ந்த நாறும் மணக்கும் என்பார்களே. அதுபோல த.ம.பி அவர்களின் தொடர் பதிவுகளை படித்து அவர் தூவிய மழையின் சாரல் என்னுள்ளும் படர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
//கவிதை அருமை. அதிலும் அந்த புகைப்படம் மிக அருமை.//
மகிழ்ச்சி...
//எல்லோருக்கும் வாழ்வில் ஒரு முறையாவது இப்படி ஒரு அனுபவம் - காதலியிடம் இருக்கலாம், நண்பனிடம் இருக்கலாம், உறவினரிடம் இருக்கலாம், உடன் பணிபுரிந்தவர்கலாகக்கூட இருக்கலாம் - கண்டிப்பாக இருந்திருக்கும்.
ஈரக்குலையை பிய்த்தெடுததுபோல் உணர்ந்த நேரங்கள் எமக்கும் உண்டு.
ஆனாலும் எல்லாம் கடந்து போவோம்.//
கண்டிப்பாக நானும் அனுபவம் கொண்டவன்தான். கடந்து வந்துவிட்டேன். காயம் ஆறிவிட்டது, தழும்புகள் மட்டும் ஆங்காங்கே.
//Comment deleted
This post has been removed by the author.//
இந்த பின்னூட்டம் என்னால் நீக்கப்படவில்லை.
அப்பறம் சடகோபன் சார். தங்களின் பிளாக்கில் எதோ பிரச்சனை இருப்பதுபோல் தெரிகிறது. ஏனென்றால் பின்னூட்டம் இட முடியவில்லை. நானும் 3 முறை முயன்று தோற்றுள்ளேன்.
////பார்க்காத உன் பார்வையில்
நானிருக்க வேண்டுமென்று
வேண்டிக்கொண்டது என் சுயநலம்.
நீ பார்ப்பது என்னைதான்
என்று நானறிந்து நான் கண்டதில்லை. ///
பிடித்த வரிகள்..... அருமையாக இருந்தது....
வாழ்த்துக்கள்... தொடருங்கள்.....
நீட்டிய கடிதத்தின்
நீளம் குறைவுதான் என்றாலும்
நல்லாருக்கு பாலாஜி..நிறைய எழுதுங்கள்
சப்ராஸ் அபூ பக்கர் said...
//பிடித்த வரிகள்..... அருமையாக இருந்தது....
வாழ்த்துக்கள்... தொடருங்கள்.....//
ரொம்ப நன்றிங்க அபூ பக்கர். தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்.
கவிக்கிழவன் said...
//நல்லாருக்கு பாலாஜி..நிறைய எழுதுங்கள்//
நன்றிங்க சார், உங்கள் வருகை மற்றும் கருத்திற்கும்.
Post a Comment