க.பாலாசி: மழலைகளும் மரணங்களும்...

Friday, December 4, 2009

மழலைகளும் மரணங்களும்...

வேதாரண்யத்தில் நடந்த பள்ளி வாகன விபத்திற்கும் (இதுவரை) 9 குழந்தைகளின் உயிரிழப்பிற்கும் வழக்கம்போல் நமது முதல்வர், முரசொலியில் ஒரு கவிதையும், திரைத்துறைக்கு ஒரு காவியமுமாக எழுதி மௌன கண்ணீரஞ்சலி செலுத்திவிடுவார். உடனிருப்புக்கள் (பிறப்பு) யாரும் கவலைக்கொள்ள தேவையில்லை. அதேபோல் ரத்தத்தின் ரத்தங்களுக்காக கொடநாடு நிலத்திலிருந்தபடி 200 பக்க ஆறுதல் அறிக்கையை எதிர்கட்சித்தலைவர் தயார் செய்துவருவதாக உளவுத்துறை, கோபாலபுரத்தை உசுப்பியுள்ளதாகவும் தகவல். விரைவில் அனைத்து அரசியல்வாதிகளும் நாகப்பட்டிணத்திற்கு அஞ்சலி செலுத்தவும், ஆறுதல் கூறவும் இழப்பீடு வழங்கவும் வரிந்துகட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள்.

இந்த விபத்திற்கு காரணம் ஓட்டுனர் உரிமம் பெறாத ஓட்டுனரே என்று, மக்களும் போக்குவரத்துதுறை அதிகாரிகளும் கண்டுபிடித்திருக்கின்றனர்(!?). இன்னொரு சாரார் அந்த வாகனத்தில் 15 குழந்தைகளே பயணம் செய்யமுடியுமென்றும், மொத்தம் 22 குழந்தைகள் அவ்வாகனத்தில் இருந்ததாகவும் வருத்தப்படுகிறார்கள் மற்றும் பள்ளிவாகனம் சரியாக பராமறிக்கப்படாததும் காரணமாம். பள்ளிக்கல்வித்துறையும், போக்குவரத்துதுறையும் ஒருவரையொருவர் அயோக்கியன் என்று உண்மைகளை உளரிவருகின்றனர். எனது எண்ணம் 16லிருந்து 22வது குழந்தை வரை அந்த வாகனத்தில் ஏற்றிய பெற்றோர்களுக்கு ஏன் இந்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் போனது?

எத்தனையோ மூன்று சக்கர வாகனங்கள் எல்லைக்குமீறிய அளவில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு போவதை பார்த்திருக்கிறோம். இத்தனைக் குழந்தைகளை ஏற்றிய ஒரு வாகனத்தில் கடைசி குழந்தையாக தன்னுடையதையும் கடமையே கண்ணாக கடைசியில் ஏற்றிவிடும் பெற்றோர்கள் கொஞ்சமாவது சிந்தித்து பார்க்கவேண்டும். இத்தனை நெரிசலில் நம் பிள்ளையையும் ஏற்றிவிடுகிறோமே, இவ்வாகனம் விபத்துக்குள்ளானால் என்ன ஆகும் என்ற எண்ணம் சிறிதேனும் அவர்களுக்கு இருக்கவேண்டும். எத்தனை பண, மன துயர்களுக்கிடையே படிக்க வைத்தாலும் ஒரு குழந்தையின் உயிர் எவ்வளவு விலைமதிப்பில்லாதது. என்ன சொல்லி என்ன பயன். கந்தனுக்கு புத்தி கவட்டியில் என்பார்கள். இதேபோல அடுத்த விபத்து நடந்தாலும் எவரும் கண்டுகொள்ளப்போவதில்லை.


புளியங்காய்க்கு புளிப்பை ஏற்றிவிடவா முடியும்?


28 comments:

சந்தனமுல்லை said...

:-((

DHANS said...

naan elutha ninaithathai neengal eluthiviteergal

ப்ரியமுடன் வசந்த் said...

நியூஸ் படிச்சதும் ரொம்ப கஷ்டமாயிடுச்சு...

இப்போவும் இந்த மாதிரி ஆள்களை நினைக்கும்போது மிருகம் மாதிரி நடந்துகிடணும்ன்னு தோணுது

sathishsangkavi.blogspot.com said...

நமது குழந்தை செல்லும் வாகனம்
சரியானதா? டிரைவர் வண்டி எப்படி
ஓட்டுகிறார்? குழந்தை உட்கார இடமிருக்கா?
குழந்தை எப்படி செல்கிறது? இதை கவனிப்பதை விட
பெற்றோருக்கு என்ன வேலை?

நண்பர் பாலாசி அவர்களே நான் குழந்தைகள் செல்லும் வாகனத்தின்
மீது கவனக்குறைவாக இருந்த பெற்றோரையே கண்டிக்கிறேன் உங்கள் வழியில்.......

vasu balaji said...

எழவெடுத்த செல் ஃபோன்ல பேசிகிட்டே வண்டி ஓட்டினதா தினத்தந்தி சொல்லுது. அதையும் விட இறக்கீட்டு முதல்ல டிரைவர் தப்பிச்சி நீந்தி ஓடீட்டானாம். காப்பாத்தின க்ளீனரையும் ம(மா)க்கள் அடிக்க வர கூட காப்பாத்தின ஒரு பெண் அவரை மறைச்சி வெச்சி போலீஸ் வந்ததும் ஒப்படைச்சிருக்கு.

புளியங்காய்க்கு புளிப்பை ஏற்றிவிடவா முடியும்?

இதுதான் சரி

Anonymous said...

அடுத்த செய்தி கிடைக்கும் வரை இந்த செய்தி சூடாக இருக்கும் அடுத்த வலி வரும் வரை இந்த வலி கொடுமையாக இருக்கும்....பொருப்புணர்சி இல்லாது போனால் இப்படி தான்...போன உயிரின் மதிப்பு இழந்தவர்க்கு மட்டுமே தெரியும்...

மகா said...

//புளியங்காய்க்கு புளிப்பை ஏற்றிவிடவா முடியும்?//

well said balaji.....

அன்புடன் மலிக்கா said...

ஆமாம் பாலாஜி நெஞ்சம் பதறிவிட்டது பிஞ்சுக்குழந்தைகளின் பரிதாப மரணங்கள்..

அகல்விளக்கு said...

அடுத்து நம்ம மக்கள் என்ன பண்ணபோறாங்க....

மவுன அஞ்சலி செலுத்திட்டு நாளைக்கு ஆட்டோக்கு வெயிட் பண்ணி குழந்தையை அள்ளி கொட்டிட்டு போகத்தான் போறாங்க...

---------------
//புளியங்காய்க்கு புளிப்பை ஏற்றிவிடவா முடியும்?//

நிதர்சனம் பாலாஜி.

நேரமின்மை அல்லது சோம்பேறித்தனம் அப்படின்ற ஒரு சின்ன விஷயம் எவ்வளவு பாதகத்தை உண்டாக்கி விட்டது.

பழமைபேசி said...

ப்ச்

புலவன் புலிகேசி said...

//எனது எண்ணம் 16லிருந்து 22வது குழந்தை வரை அந்த வாகனத்தில் ஏற்றிய பெற்றோர்களுக்கு ஏன் இந்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் போனது?//

சரியா சொன்னீங்க பாலாசி...இவங்கல்லாம் எப்படா கொழந்த பள்ளிக்கு போவும் தொலைகாட்சித் தொடர் பாக்கலாமுன்னுதான் இருக்காங்க...

தேவன் மாயம் said...

கொடிய நிகழ்வு பாலாஜி!!! குழந்தைகள் விசயத்தில் கவனம் தேவை!!

Jerry Eshananda said...

செல்லிடப்பேசியால் வந்த வினை.,ஆன்மா சாந்தி அடையட்டும். ஓம் சாந்தி..

ஈரோடு கதிர் said...

//இதேபோல அடுத்த விபத்து நடந்தாலும் எவரும் கண்டுகொள்ளப்போவதில்லை. //

இந்த நாசமாப் போற மொன்னைத்தனம் தான் கொடுமை... இதை நாகரீகமாக சகிப்புத்தன்மைனு சொல்லுவாங்க

சீமான்கனி said...

சேதி கேட்கும்போது எனக்கும் பதறி போனது பாலாசி....யாரை குற்றம் சொல்லி என்ன பயன் விட்டு பிரிந்த சிட்டுகள் திரும்ப கிடைக்குமா???
புளியங்காய்க்கு புளிப்பை ஏற்றிவிடவா முடியும்?

சரிதான் இது...

கலகலப்ரியா said...

தேவையான பதிவு பாலாசி..!

ஹேமா said...

நானும் "நடந்தது என்ன" நிகழ்வில் பார்த்தேன்.மனசுக்குக் கஸ்டமாயிருந்தது.அதற்கு அவர்கள் பெற்றோல் விலையேற்றத்தைக் காரணம் சொல்கிறார்கள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

:((

இன்றைய கவிதை said...

ஓட்டுனர் செல்பேசியை உபயோகப்படுத்தியதாகவும்,
அதனால் விபத்து நிகழ்ந்ததாகவும் உபரித் தகவல்!

உண்மையாக இருந்தால், யாரை நோவது?!

-கேயார்

பூங்குன்றன்.வே said...

பிஞ்சு உடல்களை உயிரற்ற பிணங்களாய் பார்க்கும் மனது யாருக்குமே வராது புலிகேசி!
மழலைகள் என்ன பாவம் பண்ணின? தவறுக்கு காரணம் ஆன கயவர்கள் இன்னும் நடமாடிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.

சட்டமும்,நீதியும்,நியாயம் மழலைகளின் பெற்றோர்களுக்கு எதை கொடுத்து ஈடு செய்ய முடியும்?
இந்த அரசியல் நாய்களை பற்றி பேசி வெறுத்து போச்சுங்க.

ஹுஸைனம்மா said...

பெற்றோருக்கு விலைவாசி காரணம்.

வண்டி/ பள்ளி உரிமையாளருக்கு கொடுக்கவேண்டிய லஞ்சங்கள் காரணம்.

வண்டி ஓட்டியவருக்கு ஒருவேளை அடுத்த டிரிப்புக்கு நேரமாகியிருக்கும்!!

அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் அடுத்த சூடான செய்தி வரும்வரை சுறுசுறுப்பாக ஆய்வு செய்வதாகக் காட்டவேண்டுமே என்ற கவலை!!

அவரவர்க்கு அவரவர் நியாயங்கள்!!

கமலஹாசன் இந்தியன் படத்தில் ஏற்கனவே சொல்லியதுபோலவே நடந்துவிட்டது என்றும் சிலர் கிளம்புவார்கள்!!

சந்தான சங்கர் said...

//எத்தனை பண, மன துயர்களுக்கிடையே படிக்க வைத்தாலும் ஒரு குழந்தையின் உயிர் எவ்வளவு விலைமதிப்பில்லாதது.//

மதிப்பில்லாத பிஞ்சுகளை
மதிப்பிடுகிறார்கள் எத்தனை இறப்பென்று...

அரசாங்கம்.

அன்பின் அளவுகோல் இல்லாத செல்வங்களின் மேல்
அக்கறையின் அளவுகோல் அற்ற...

பெற்றோர்கள்..

க.பாலாசி said...

நன்றி சந்தனமுல்லை

நன்றி DHANS

நன்றி பிரியமுடன்...வசந்த்

நன்றி Sangkavi

நன்றி வானம்பாடிகள் அய்யா...

க.பாலாசி said...

நன்றி தமிழரசி

நன்றி மகா

நன்றி அன்புடன் மலிக்கா

நன்றி அகல்விளக்கு

நன்றி பழமைபேசி

க.பாலாசி said...

நன்றி புலவன் புலிகேசி

நன்றி தேவன் மாயம்

நன்றி ஜெரி ஈசானந்தா.

நன்றி ஈரோடு கதிர்...

நன்றி seemangani

நன்றி கலகலப்ரியா

நன்றி ஹேமா

நன்றி ச.செந்தில்வேலன்

நன்றி இன்றைய கவிதை

நன்றி பூங்குன்றன்.வே

நன்றி ஹுஸைனம்மா

நன்றி சந்தான சங்கர்

"உழவன்" "Uzhavan" said...

பொறுப்பும் வேண்டும்; விழிப்பும் வேண்டும்.
கடுமையான நடவடிக்கைகள் எடுக்காததே இவர்களை மேலும்மேலும் இவர்களை இப்படி பொறுப்பற்று நடக்கத் தூண்டுகிறது.
ஊட்டி மண் சரிவையும் சொல்லலாம்.

க.பாலாசி said...

//" உழவன் " " Uzhavan " said...
பொறுப்பும் வேண்டும்; விழிப்பும் வேண்டும்.
கடுமையான நடவடிக்கைகள் எடுக்காததே இவர்களை மேலும்மேலும் இவர்களை இப்படி பொறுப்பற்று நடக்கத் தூண்டுகிறது.
ஊட்டி மண் சரிவையும் சொல்லலாம்.//

நன்றி அய்யா...வருகைக்கும் கருத்திற்கும்..

priyamudanprabu said...

என்ன சொல்லி என்ன பயன்
புத்தி வராது(அரசுக்கும் மக்களிக்கும்(

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO