க.பாலாசி: பழய நெனப்புதான் பேராண்டீ....

Thursday, January 7, 2010

பழய நெனப்புதான் பேராண்டீ....சாதாரணமா ஒத்த சுழி இருந்தாலே கையும் காலும் சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க. நமக்குவேற ரெட்டசுழியா....ஆடுற காலும் பாடுற வாயும் கம்முன்னா இருக்கும்? ரெண்டாவது படிக்கும்போது கைய வச்சிகிட்டு சும்மா இல்லாம எங்கப்பா பாக்கெட்லேர்ந்து 25 பைசாவ களவாடிட்டேன். புள்ள எதோ ஆசப்பட்டுட்டான்னு எப்பாராவது பெருந்தன்மையா கண்டுக்காம விட்டுருக்கலாம். உட்டாரா மனசன். அந்த 25 பைசாவுக்கு போட்டாரே ஆட்டம். மொத்தமா நாலுபேரு உள்ள வீட்ல, திருட்டு கொடுத்த எங்கப்பாவ தவிர பாக்கி மூணுபேரு. எங்கம்மா அந்த காச எடுத்துட்டுபோயி பப்ரு முட்டாயி வாங்கி சாப்டபோறதில்லை. எனக்கு முன்னாடியே பொறந்த எக்காளுக்கு அந்தளவுக்கு யானை (ஞானம்) இல்ல. சோ, எப்பாருக்கு உச்சிமண்டைக்குமேல முடி நட்டுக்க கோவம் வந்தது என் மேலத்தான்.


ஆரம்பிச்சாரே மனுசன். சும்மா தொரத்தி தொரத்தி நொச்சி சிம்பு நோவுவர வரைலியும். வேற வழியில்லாம வாங்குன அடிக்கெல்லாம் வஞ்சன இல்லாம ஒத்துக்கவேண்டியாயிடுத்து (இல்லன்னா பந்தியில வச்ச சோறு சந்திக்குல்ல வந்திடும்). சரி இதோட முடிச்சிபோச்சுன்னு நம்ம்ம்பி உட்காந்திருந்தேன். ஆனா, விதி விடலையே.


நமக்கு அம்மா சைடுல கொஞ்சம் செல்லம். அடிவாங்குறதிலேர்ந்து கொஞ்சமா காப்பாத்தி கூட்டியாந்து உள்ளார ஒட்கார வச்சுது. எங்கப்பாருக்கு அப்டியும் நட்டுகிட்ட முடி நாணிபோவாம, அதெப்படி படவா ராஸ்கோலு திருடலாம்னு பரபரன்னு வெளியில இழுத்துகிட்டு வந்தவரு கொள்ளவாசப்படி கோலத்துக்கு நேரா உச்சி வெயில்ல நிக்கவச்சு, வௌக்கமாத்த கைலக்குடுத்து, நீயே உன்ன அடிச்சிக்கன்னு சொல்லி, எப்டி அடிக்கணும்னு ட்ரெயினிங் வேற கொடுத்தாரு. (அடப்பாவி இது புதுசால்ல இருக்கு) ஒரு 25 பைசாவ திருடுனதுக்கா இவ்ளோ பெரிய தண்டன. வேற வழி, அடிச்சிகிட்டுதான ஆவனும். ஸ்டார்ட் மியூசிக்....போடுறா....ஒண்ணு, ரெண்டு, மூணு....அடிக்கச்சொல்லி பாத்துகிட்டு இருந்தாலும் பரவாயில்ல. சைக்கிள எடுத்துகிட்டு தொர வெளியில கௌம்புனாரு. அப்பாடி இதோட முடிஞ்சிதுடா சாமின்னு நெனச்சேன். முடிஞ்சிதா...அதான் இல்ல.


வெளியில களம்புன எசமான் வேதவாக்கு சொல்ற மாதிரி, மொளச்சி மூணு எல (மூணாங்கிளாஸ்) கூட போவல இப்பவே திருடுது. இதெல்லாம் உருப்படவா போவுதுன்னுட்டு... நான் திரும்பி வரவரையில் அடிச்சிகிட்டே இருக்கணும்னு சொல்லிட்டு கௌம்பிட்டாரு. மொத்தமா ஒரு இருவது இருவத்தஞ்சு அடி சொத்தமாவே (அவ்வ்வ்வ்...) அடிச்சிகிட்டு இருந்தேன். யாராவாது அக்கம்பக்கத்துல பாக்குறாங்களான்னு அப்பப்ப பாத்துக்கிட்டேன். நல்லவேள ஒரு நாதாரியும் பாக்கல. (முக்கியமா எதித்த வீட்டு ஃபிகரு). அப்டியும் பாருங்க மூணாவது வீட்டு பனங்கொட்ட (அந்த ஃபிகரோட தலமுடி அப்டி இருக்கும்) பாத்துடுச்சு. ஃபியூச்சர்ல அதுதான் நமக்கு ஹீரோயினா ஆயி, பெறவு உயிராவும் மயிராவும் நெனச்சிகிட்டு இருக்கவேண்டியதாப்போச்சு. ஊரே கூடிநின்னு வேடிக்க பாத்தாலும், நம்ம கண்ணு ஏதாவது பொம்பளைங்க பாத்துடப்போறாங்கன்னுதானே பாக்கும். இந்த பனங்கொட்ட பாத்தப்ப மட்டும் மனசுக்குள்ள ஹீரோ கணக்கா ஆயிடுச்சு. எங்கம்மாவுக்கு எப்பார எதுக்குர திராணி இல்லாத்தால நான் சொந்த கால்ல நின்னு அடிச்சிக்கிர அழக பாத்து அருகாப்படிலேயே உட்காந்துடுச்சு. அதுக்குள்ள போன மச்சான் திரும்பி வந்தார்ர்ர்...க்வாட்டர் மணத்தோட.. மறுபடியும் ஸ்டார்ட் மியூசிக்....


ஒருவழியா அவரு ஃபிளாட் ஆனதுக்கப்பறம்தான் என் கையிலருந்த வௌக்கமாறுக்கு விடிவுகாலம் பொறந்துச்சு. நான் திருனுடத மட்டும் எப்பாரு கண்டுக்காம வுட்டுருந்தாருன்னா....இன்னேரம் நானும் ஒரு ‘நல்ல’ அரசியல்வாதியா ஆகியிருப்பேன்.


88 comments:

vasu balaji said...

அடிங்கொய்யால. காக்க காக்க வெச்சி போட்டாலும் சூப்பரா போட்ட சாமி ஒருஇடுகை. உங்குட்ட இவ்வளவு திறம இருக்கா:)). அட லவட்டுனத சொன்னேன். ஆனா ஃபிகர லவ்சுட்டா வெளக்குமாத்தடி தப்பாதுடின்னு சொல்லி குடுத்தும் திருந்தலையே நீய்யி.

ஈரோடு கதிர் said...

தம்ம்ம்ம்ம்ம்பி... அந்த வெரலு சூப்பர் கொழந்த நீயா?


கொழந்தையோட அழகப் பார்த்தா சந்தேகமா இருக்கு

ஈரோடு கதிர் said...

இடுகை அருமை

அன்புடன்
கதிர்

.
.
.
.
.
.
டிஸ்கி: ங்கொய்யாலே இப்புடி பின்னூட்டம் போடுவேனு நினைச்சியா..

இரு ராசா.... இன்னிக்கு கட்டம் சரியில்ல உனக்கு... வந்து கும்முறேன்

vasu balaji said...

அவரே சொல்லீட்டாரு. லெட்ஸ் ஸ்டார்ட் த மீஜிக். ஒன்னு ரெண்டு மூனு..

ஈரோடு கதிர் said...

ரெட்ட சுழியா...

பனங்கொட்டைய சைட் அடிச்சத பார்த்தா... மவனே... ஏழெட்டு சுழி இருக்கும் போல இருக்கே..

ஈரோடு கதிர் said...

//25 பைசாவ களவாடிட்டேன்//

பீடி குடிக்கிறதுக்கு எதுக்குப்பா... 25 பைசா!!!!

பட்ஜெட் ஜாஸ்தியோ !!!???

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ பனங்கொட்டைய சைட் அடிச்சத பார்த்தா...//

அப்ப பவானி இதானா?

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ பீடி குடிக்கிறதுக்கு எதுக்குப்பா... 25 பைசா!!!!

பட்ஜெட் ஜாஸ்தியோ !!!???//

கத்திரி சீரெட்டா இருக்குமோ. பனங்கொட்டைக்கு பிலிம் காட்ட:))

ஈரோடு கதிர் said...

//எப்பாருக்கு உச்சிமண்டைக்குமேல முடி நட்டுக்க கோவம் வந்தது என் மேலத்தான்.
//

புத்திசாலி அப்பாரு வாழ்க... இல்லைனா ஒடு திருட்டு அரசியல் வியாதிகிட்ட இன்னிக்கு எத்தன் பேரு மாட்டியிருக்கனும்..

நீ கம்னு நட்டுகிட்டு நின்ன முடியில ஒரு கொடி கட்டி விட்டு பறக்க விட்டிருக்கலாம் பாலாசி

க.பாலாசி said...

// ஈரோடு கதிர் said...
பீடி குடிக்கிறதுக்கு எதுக்குப்பா... 25 பைசா!!!!
பட்ஜெட் ஜாஸ்தியோ !!!???//

எப்பாரு அதுக்குதானே வச்சிருந்தாரு. அத களவாடினா? சும்மாவா இருப்பாரு.

ஈரோடு கதிர் said...

//முடிச்சிபோச்சுன்னு நம்ம்ம்பி உட்காந்திருந்தேன்//

அதெப்பிடி விடுவாரு...

ஒரு அணாவா? ரெண்டு அணாவா? நாலு அணா ஆச்சே...

பெரிய தொகைக்கு பல தண்டனை கொடுக்காட்டி பயபுள்ள இன்னிக்கு ஈரோட்ல உட்கார்ந்திருக்கும்

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
அப்ப பவானி இதானா?//

அது வேற கத சாமி...

ஈரோடு கதிர் said...

//எங்கப்பாருக்கு அப்டியும் நட்டுகிட்ட முடி நாணிபோவாம, அதெப்படி படவா ராஸ்கோலு திருடலாம்னு //

கரகாட்டக்காரன் சினிமா பார்த்திருப்பாரோ... ஜிகினாஸ்ரீ மேட்டர கேட்டு நொந்து போயிருப்பாரோ

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ புத்திசாலி அப்பாரு வாழ்க... இல்லைனா ஒடு திருட்டு அரசியல் வியாதிகிட்ட இன்னிக்கு எத்தன் பேரு மாட்டியிருக்கனும்..//

சே சே. பய புள்ளைக்கு அல்பம் 25 காசுதான எடுக்க தோணிச்சி. ஒரு வேள நல்ல அரசியல் வ்யாதியா வந்திருக்குமோ.

//நீ கம்னு நட்டுகிட்டு நின்ன முடியில ஒரு கொடி கட்டி விட்டு பறக்க விட்டிருக்கலாம் பாலாசி//

ம்கும். அப்புறம் இவரு கோவணம் கட்ட அண்ணாக்கவுரு இருந்திருக்காது.:))

ஈரோடு கதிர் said...

//கொள்ளவாசப்படி கோலத்துக்கு நேரா உச்சி வெயில்ல நிக்கவச்சு//

அட... ராசா....ராசா...

ஒரு போட்டோ புடிக்காம போயிட்டாங்களே...

கோலத்துக்கு நடுவுல கோமனத்தோட நின்ன போசு மிஸ்ஸாயிப்போச்சே...!!!!

ஈரோடு கதிர் said...

//நீயே உன்ன அடிச்சிக்கன்னு சொல்லி, //

அட்றா சக்க..அட்றா சக்க..அட்றா சக்க..

sathishsangkavi.blogspot.com said...

முளச்சு மூணு எல விடல அதுக்குள்ள எதிர்த்த வீட்டு பிகரு........

அந்த ஹீரோயின் மேட்டர் உங்க அப்பாவுத் தெரிஞ்சா எப்படி மொத்திருப்பாரு.........

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
புத்திசாலி அப்பாரு வாழ்க... இல்லைனா ஒடு திருட்டு அரசியல் வியாதிகிட்ட இன்னிக்கு எத்தன் பேரு மாட்டியிருக்கனும்..//

இலலீங்க...நான் யோக்கியனுங்க.

vasu balaji said...

க.பாலாசி said...

/ அது வேற கத சாமி...//

அடப்பாவி. அப்ப 2ம்புல இருந்து எத்தன உசிரு மசிரு கணக்கு வச்சிருக்கியா?:))

ஈரோடு கதிர் said...

//எப்டி அடிக்கணும்னு ட்ரெயினிங் வேற கொடுத்தாரு.//

உங்கப்பாரு புத்திசாலிய்ய்யா..... இல்லீனா....
எப்படி அடிச்சிகிறதுன்னு ட்ரெயிங் கிளாசு போக இன்னொரு 25 பைசா திருடியிருவியோன்னு.... தான்

ஈரோடு கதிர் said...

//ஒரு 25 பைசாவ திருடுனதுக்கா இவ்ளோ பெரிய தண்டன//

சட்டம் எல்லாத்துக்கும் ஒன்னுதான்...

இன்னிக்கு பீடிக்கு வச்சிருந்த 25 பைசாவ திருடுவே...

நாளைக்கு குவாட்டருக்கு வச்சிருந்த 25 ரூவாய திருடுவே....

எல்லாம் வந்தபின் அடிச்சு... வரும் முன் காப்போம் வெளம்பரந்தான்

vasu balaji said...

கதிர். இந்த ஃபோட்டோ பாருங்க பாக்க விரல் சூப்புற குழந்த மாதிரி இருந்தாலும் வெரலு பனங்கொட்டைக்கு சிக்னல் காட்றாமாதிரி இல்ல? அந்தக் கரைக்கா வான்னு:))

கலையரசன் said...

நான் கூட கும்மி களத்துல தொபுக்கடீர்ன்னு குதிக்க ஓடி வந்தேன்.. நல்லவேளை குதிக்கலை!

இரட்டை சுழியை கண்டா எனக்கு அலர்ஜி..
:-)

vasu balaji said...

எனக்கென்னவோ ஊருகாய்க்கு வச்சிருந்த 25 காசு திருடுனதுலதான் காரமாயிட்டாருன்னு படுது:))

ஈரோடு கதிர் said...

//மொளச்சி மூணு எல //

அட ஒம்பட தலையில முடி இல்லீங்கிறத சொல்லிருப்பாரு.. இதுக்கு முன்னாடி ஒம்பட போட்டோல முடி இல்லையே கண்ணு

vasu balaji said...

//ஒருவழியா அவரு ஃபிளாட் ஆனதுக்கப்பறம்தான் என் கையிலருந்த வௌக்கமாறுக்கு விடிவுகாலம் பொறந்துச்சு.//

அவரு ஃப்ளாட் ஆனாரு சரி. நட்டுகிட்ட முடி ஃப்ளாட் ஆச்சா:))

vasu balaji said...

கலையரசன் said...

//நான் கூட கும்மி களத்துல தொபுக்கடீர்ன்னு குதிக்க ஓடி வந்தேன்.. நல்லவேளை குதிக்கலை!

இரட்டை சுழியை கண்டா எனக்கு அலர்ஜி..
:-)//

கதிர் கலை சொல்லுற ரெட்டை சுழி நானும் நீங்களுமா?

ஈரோடு கதிர் said...

//யாராவாது அக்கம்பக்கத்துல பாக்குறாங்களான்னு அப்பப்ப பாத்துக்கிட்டேன். நல்லவேள ஒரு நாதாரியும் பாக்கல//

ங்கொய்யாலே...

திருடுனவரு நல்லவரு...
பார்த்தவங்க மட்டும் நாதாரியோ.....

ஈரோடு கதிர் said...

//(முக்கியமா எதித்த வீட்டு ஃபிகரு).//

ஜொள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளு....
அதுவும் 7 வய்சிலேயே

ஈரோடு கதிர் said...

//அதுக்குள்ள போன மச்சான் திரும்பி வந்தார்ர்ர்...க்வாட்டர் மணத்தோட.. மறுபடியும் ஸ்டார்ட் மியூசிக்....
//


ஓ.... 7 வயசிலேயெ குவார்ட்டர் மணந்துச்சோ.... நாறலியோ

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ ஜொள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளு....
அதுவும் 7 வய்சிலேயே//

அது ஆறு மாசத்துல இருந்தே ஆரம்பிச்சிருப்பானாட்ருக்கு.

ஈரோடு கதிர் said...

கை வலிப்பதால் இத்துடன் எமது... கும்மி நிறைவடைகிறது

நன்றி... வணக்கம்


தம்பி எத்தன பின்னூட்டம் போட்டேனு கணெக்கெடுத்து காசு கரீக்ட்டா செட்டில் பண்ணிறனும்... இல்லாட்டி இனிமே ஸ்மைலி மட்டும்தான் போடுவேன்

(டிஸ்கி: ஸ்மைலி எப்படி போடுவது என சொல்லுங்கப்பா யாராவது)

vasu balaji said...

ஒரு வேள குவார்டர லவட்டிட்டு ஊறுகாய்க்கு லவட்டி மாட்டிகிட்டானா? இல்லீன்னா 25 பைசாக்கா ஒரு மனுசனுக்கு இம்புட்டு கோவம் வரும்?

vasu balaji said...

அதென்ன அன்புடன் ஆரூரன் வந்ததும் கழண்டுக்கிறது. இதுக்கு செட்டில் வேற பண்ணுவாங்களோ

kathir said...
This comment has been removed by the author.
ஆரூரன் விசுவநாதன் said...

//அப்டியும் பாருங்க மூணாவது வீட்டு பனங்கொட்ட (அந்த ஃபிகரோட தலமுடி அப்டி இருக்கும்) பாத்துடுச்சு. ஃபியூச்சர்ல அதுதான் நமக்கு ஹீரோயினா ஆயி, பெறவு உயிராவும் மயிராவும் நெனச்சிகிட்டு இருக்கவேண்டியதாப்போச்சு//


இது நல்லாயிருக்கே.....

ஆரூரன் விசுவநாதன் said...

//வானம்பாடிகள்//

//அதென்ன அன்புடன் ஆரூரன் வந்ததும் கழண்டுக்கிறது. இதுக்கு செட்டில் வேற பண்ணுவாங்களோ//


அதயேங் கேக்கறீங்க..... வழக்கம்போல பாஸ் வேர்ட் மறந்திட்டேன். கமெண்ட் போட முடியல, என்னோட ரகசிய குறியீட்டு எண்ணை வேற கதிருக்கு சொல்லிபோட்டனுங்.....

அதுக்காக போயி புதுசா மாத்தப் போக வந்தது வில்லங்கம்


அப்பறம், நம்ம எப்பிடியோ, உள்ளுக்க வந்திட்டனுங்ணா

ஆரூரன் விசுவநாதன் said...

//கதிர்//

//கை வலிப்பதால் இத்துடன் எமது... கும்மி நிறைவடைகிறது

நன்றி... வணக்கம்//


நாட்டாமை??????????தீர்ப்பை மாத்து///

ஈரோடு கதிர் said...

//ஆரூரன் விசுவநாதன் said...
நாட்டாமை??????????தீர்ப்பை மாத்து///

ஜாரி.... மிச்டர் ஆரூரன்.... பார் ஏ ஜேஞ்ச்... நீங்க கும்முங்க....

ஐ யேம் பிஜி

ஆரூரன் விசுவநாதன் said...

அதெல்லாம் முடியாது, நானும் வெளிநடப்பு செய்யறேன்

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/அதெல்லாம் முடியாது, நானும் வெளிநடப்பு செய்யறேன்/

அப்புடி போடுங்க. இவரு பிஜின்னு போனா நாம விட்ருவமா?

ஈரோடு கதிர் said...

//ஆரூரன் விசுவநாதன் said...
அதெல்லாம் முடியாது, நானும் வெளிநடப்பு செய்யறேன்
//

தலைவரே... நீங்க என்னிக்கு உள்ள நடந்த்றிக்கீங்க.... எப்பூமே... வெளியதான் நடக்கறீங்க

நடங்க தலைவரே...நடங்க

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
அப்புடி போடுங்க. இவரு பிஜின்னு போனா நாம விட்ருவமா?//

ஆகா... பேராண்டீங்கல்லாம் ஒண்ணு கூடிட்டாங்கப்பா...கூடிட்டாங்கப்பா....

ஆரூரன் விசுவநாதன் said...

//ஆகா... பேராண்டீங்கல்லாம் ஒண்ணு கூடிட்டாங்கப்பா...கூடிட்டாங்கப்பா....//


எங்கய்யா போனீர்......கலக்கிவிட்டீர்,

டெல்டா தமிழ் கேட்டு நாளாச்சு...

*இயற்கை ராஜி* said...

ரோட்ல சாட்டைல அடிச்சிக்கிறவங்களைப் பார்த்தா இவ்ளோ நாளா பாவமா இருக்கும்.ஆனா இந்தப் போஸ்டப் படிச்சப்புறம் அவிங்களப் பாத்தாக் கூட சிரிப்புத்தான் வருமாட்ட இருக்கு.


உங்கப்பா எப்டிங்க அப்ப்டி ஒரு ஆயுத‌த்தக் கண்டுபுடிச்சார்.ச்சே..சிம்ப்லி கிரேட்:-)))

க.பாலாசி said...

//இய‌ற்கை said...
ச்சே..சிம்ப்லி கிரேட்:-)))//

யாருங்க அது புதுசா இருக்கு.. (வருக வணக்கம்.)

கிரேட்டாம்ல... எது நான் திருடுனதா? அடிவாங்குனதா??

ஈரோடு கதிர் said...

//க.பாலாசி said...

கிரேட்டாம்ல... எது நான் திருடுனதா? அடிவாங்குனதா??//

அடி வாங்குனுததுதான் ராசா...

அல்லாருக்கும் ... பை...பை

நான் ஊட்டுக்குப் போறேன்....ஊட்டுக்குப் போறேன்.... நானும் குடும்பஸ்தன்தான்

ஹேமா said...

பாலாஜி,சிரிச்சு அடங்கல.
முடிலப்பா.அதோட பின்னூட்டப் புயல்கள் ....சொல்லி வேலையில்ல.

பாவம் நீங்க பாலாஜி !

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அடடா ஒரு `நல்ல' அரசியல்வாதி மிஸ் ஆயிட்டாரே.:-))))))

ஹேமா said...

சொல்ல மறந்திட்டேன்.படம் அழகு.
மேல யாரோ சொன்னமாதிரி விரல் சூப்பிக்கிட்டே கண்ணு சைட் அடிக்குது.ஆனாலும் நல்லாவே இருக்கு.

முனைவர் இரா.குணசீலன் said...

நான் திருனுடத மட்டும் எப்பாரு கண்டுக்காம வுட்டுருந்தாருன்னா....இன்னேரம் நானும் ஒரு ‘நல்ல’ அரசியல்வாதியா ஆகியிருப்பேன். //

இதை நான் எதிர்பார்க்கவே இல்லை நண்பரே..

எள்ளல் கலந்த நடையில் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..

எல்லோர் வாழ்விலும் இப்படியொரு நிகழ்ச்சி நடந்திருக்கும்..!

இன்பம் மட்டுமே கொண்டதல்லவே வாழ்க்கை..

கலகலப்ரியா said...

=)))... choo... sry balasi..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) இது மாதிரி எங்க பக்கத்துவீட்டுல ஒருத்தங்க அவங்க ம்களை அடிச்சி வாசலில் நிறுத்துவாங்க.. விளக்கமாத்து அடிய அப்பத்தான் பாத்துருக்கேன்.. அவங்க ரெண்டு பேருக்கும் எங்க வீட்டு கேலண்டரில் என்னைக்கெல்லாம் தனலாபம்ன்னு இருக்கோ அன்னிக்கெல்லாம் அடி விழுதுன்னு ஒரு நம்பிக்கை.. வேற

கமலேஷ் said...

சிரிக்க முடியாம வயறு வலிக்கிது...என்ன உட்ருங்க....

ப்ரியமுடன் வசந்த் said...

சிம்பு நோவு//

ஹா ஹா ஹா

:-)))

சீமான்கனி said...

//அதெப்படி படவா ராஸ்கோலு திருடலாம்னு பரபரன்னு வெளியில இழுத்துகிட்டு வந்தவரு கொள்ளவாசப்படி கோலத்துக்கு நேரா உச்சி வெயில்ல நிக்கவச்சு, வௌக்கமாத்த கைலக்குடுத்து, நீயே உன்ன அடிச்சிக்கன்னு சொல்லி, எப்டி அடிக்கணும்னு ட்ரெயினிங் வேற கொடுத்தாரு.//

ஹையோ....ஹையோ....என்னத்த சொல்ல அதான் நம்ம அண்ணாச்சிங்க...இந்த வாறு வாறிடான்களே...
ஹ..ஹ....ஹ.... முடியலபா...
வாழ்க வளமுடன்......

Chitra said...

நான் திருனுடத மட்டும் எப்பாரு கண்டுக்காம வுட்டுருந்தாருன்னா....இன்னேரம் நானும் ஒரு ‘நல்ல’ அரசியல்வாதியா ஆகியிருப்பேன். ...........சிரிப்போ சிரிப்பு.

பா.ராஜாராம் said...

பாலா சார்,கதிர்..
:-))))

இடுகையும்..

:-))))))))

பிரபாகர் said...

பாலாசி,

உங்களுக்கும் ரெட்ட சுழியா?

லவட்டின மேட்டர் ரொம்ப சுவராஸ்யமா இருந்துச்சி...

பிரபாகர்.

தாராபுரத்தான் said...

அரசியல்வாதி ஆகியிருந்தா நானெல்லா பதிவு போடமுடியாதல்ல.

Romeoboy said...

சூப்பர் கொங்கு பாஷை தலைவரே ..

\\வௌக்கமாத்த கைலக்குடுத்து, நீயே உன்ன அடிச்சிக்கன்னு சொல்லி, எப்டி அடிக்கணும்னு ட்ரெயினிங் வேற கொடுத்தாரு.//


என்ன பண்றது உங்கள அடிச்சி அடிச்சி அவரு கை வீங்கி இருக்கும் .

\\வெளியில களம்புன எசமான் வேதவாக்கு சொல்ற மாதிரி, மொளச்சி மூணு எல (மூணாங்கிளாஸ்) கூட போவல இப்பவே திருடுது. இதெல்லாம் உருப்படவா போவுதுன்னுட்டு...//

இப்ப மட்டும் என்ன விளங்கிடா மாதிரி ..

புலவன் புலிகேசி said...

உங்க அப்பா பயங்கரமா யொசிச்சு உங்களையே அடிச்சிக்க சொல்லி அசத்தி புட்டாரே...

//இன்னேரம் நானும் ஒரு ‘நல்ல’ அரசியல்வாதியா ஆகியிருப்பேன். //

உங்கப்பா நல்ல காரியம் தான் பன்னிருக்காரு..

ஈரோடு கதிர் said...

//ஹேமா said...
மேல யாரோ சொன்னமாதிரி விரல் சூப்பிக்கிட்டே கண்ணு சைட் அடிக்குது//

ஹ்க்கும்... பாருய்ய்யா...

நான் தான் அப்பவே சொன்னனே

கண்ணகி said...

{ஆரம்பிச்சாரே மனுசன். சும்மா தொரத்தி தொரத்தி நொச்சி சிம்பு நோவுவர வரைலியும். வேற வழியில்லாம வாங்குன அடிக்கெல்லாம் வஞ்சன இல்லாம ஒத்துக்கவேண்டியாயிடுத்து (இல்லன்னா பந்தியில வச்ச சோறு சந்திக்குல்ல வந்திடும்). சரி இதோட முடிச்சிபோச்சுன்னு நம்ம்ம்பி உட்காந்திருந்தேன். ஆனா, விதி விடலையே.}

(மொத்தமா ஒரு இருவது இருவத்தஞ்சு அடி சொத்தமாவே (அவ்வ்வ்வ்...) அடிச்சிகிட்டு இருந்தேன். யாராவாது அக்கம்பக்கத்துல பாக்குறாங்களான்னு அப்பப்ப பாத்துக்கிட்டேன். நல்லவேள ஒரு நாதாரியும் பாக்கல.}

{ ஊரே கூடிநின்னு வேடிக்க பாத்தாலும், நம்ம கண்ணு ஏதாவது பொம்பளைங்க பாத்துடப்போறாங்கன்னுதானே பாக்கும். இந்த பனங்கொட்ட பாத்தப்ப மட்டும் மனசுக்குள்ள ஹீரோ கணக்கா ஆயிடுச்சு.}

பாலாஜி..... முடியலே. கொஞசம் கேப் விட்டு விட்டு சொன்னீங்கன்னா சிரிப்ப நிற்த்தி மூச்சுவிடமுடியும்...????
}

Anonymous said...

யப்பா சிரிக்க முடியலை....திருடினது தான் திருடினீங்க ஒரு 25000, அல்லது ஒரு 250000, இப்படி திருடியிருக்கலாமே?

ஐய்யோ நான் அமைதியான புள்ளங்கன்னு நினைச்ச கதிரும் வானம்பாடியும் அடிச்ச கும்மி பதிவை மிஞ்சிவிட்டது.....

குடந்தை அன்புமணி said...

ரொம்பத்தான் ஓட்டுட்டீங்க கதிரண்ணா... பாவம் பாலாசி...

ஈரோடு கதிர் said...

//தமிழரசி said...
ஐய்யோ நான் அமைதியான புள்ளங்கன்னு நினைச்ச கதிரும் வானம்பாடியும் அடிச்ச கும்மி பதிவை மிஞ்சிவிட்டது.....//

யெம்ம்மா.... தமிழு.... உங்கள யாரு சாமி எங்கள அமைதினு நினைக்கச் சொன்னா!!???

அதுசரி.... நா யூத்து.. வானம்பாடிய அமைதியான புள்ளைனு சொல்றது கொஞ்சம் ஓவரா இல்லையா பாட்டிமா!!

ஈரோடு கதிர் said...

//குடந்தை அன்புமணி said...
ரொம்பத்தான் ஓட்டுட்டீங்க கதிரண்ணா... பாவம் பாலாசி...//

பாலாசி... பாவமா!!!!!

அவரு எம்புட்டு நல்லவருனுன்னு நீங்க வேணா பனங்கொட்ட பாப்பாவ கேட்டுப் பாருங்கண்ணே

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ அதுசரி.... நா யூத்து.. வானம்பாடிய அமைதியான புள்ளைனு சொல்றது கொஞ்சம் ஓவரா இல்லையா பாட்டிமா!!//

அதென்ன நா யூத்து! அப்ப நாங்க யாரு. பாலாசி போட்ட படத்துல இருக்குறத விட ஒரு 2 வயசு கூட இருக்கலாம். அம்புட்டுதான். யூத்தாம்ல.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ அதுசரி.... நா யூத்து.. வானம்பாடிய அமைதியான புள்ளைனு சொல்றது கொஞ்சம் ஓவரா இல்லையா பாட்டிமா!!//

அதென்ன நா யூத்து! அப்ப நாங்க யாரு. பாலாசி போட்ட படத்துல இருக்குறத விட ஒரு 2 வயசு கூட இருக்கலாம். அம்புட்டுதான். யூத்தாம்ல.

க.பாலாசி said...

ஒரு மனுசன் கம்முன்னு இருந்தா இப்டியா கும்மியடிக்கறது.

நன்றி வானம்பாடிகள் அய்யா..

நன்றி கதிரய்யா...

//கலையரசன் said...
நான் கூட கும்மி களத்துல தொபுக்கடீர்ன்னு குதிக்க ஓடி வந்தேன்.. நல்லவேளை குதிக்கலை!
இரட்டை சுழியை கண்டா எனக்கு அலர்ஜி.. :-) //

பயப்படாதிங்க.. நாங்க நல்லவங்க.. நன்றி கலை..

//Sangamesh said...
முளச்சு மூணு எல விடல அதுக்குள்ள எதிர்த்த வீட்டு பிகரு........
அந்த ஹீரோயின் மேட்டர் உங்க அப்பாவுத் தெரிஞ்சா எப்படி மொத்திருப்பாரு.........//

அவரு எங்க மொத்தியிருப்பாரு... என்னையே என்னை மொத்திக்க வச்சிருப்பாரு...

நன்றி சங்கவி..

//ஆரூரன் விசுவநாதன் said...
எங்கய்யா போனீர்......கலக்கிவிட்டீர்,
டெல்டா தமிழ் கேட்டு நாளாச்சு...//

நன்றி ஆரூரன் அய்யா...

க.பாலாசி said...

//இய‌ற்கை said...
ரோட்ல சாட்டைல அடிச்சிக்கிறவங்களைப் பார்த்தா இவ்ளோ நாளா பாவமா இருக்கும்.ஆனா இந்தப் போஸ்டப் படிச்சப்புறம் அவிங்களப் பாத்தாக் கூட சிரிப்புத்தான் வருமாட்ட இருக்கு.
உங்கப்பா எப்டிங்க அப்ப்டி ஒரு ஆயுத‌த்தக் கண்டுபுடிச்சார்.ச்சே..சிம்ப்லி கிரேட்:-)))//

நன்றி இயற்கை.. முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி..

//ஹேமா said...
பாலாஜி,சிரிச்சு அடங்கல.
முடிலப்பா.அதோட பின்னூட்டப் புயல்கள் ....சொல்லி வேலையில்ல.
பாவம் நீங்க பாலாஜி !//

அவ்வ்வ்... நன்றி ஹேமா...

//Blogger ஸ்ரீ said...
அடடா ஒரு `நல்ல' அரசியல்வாதி மிஸ் ஆயிட்டாரே.:-))))))//

ஆமங்க... பாருங்களேன். நன்றி ஸ்ரீண்ணா..

//Blogger ஹேமா said...
சொல்ல மறந்திட்டேன்.படம் அழகு.
மேல யாரோ சொன்னமாதிரி விரல் சூப்பிக்கிட்டே கண்ணு சைட் அடிக்குது.ஆனாலும் நல்லாவே இருக்கு.//

அப்டியா.??? நன்றி..

//Blogger முனைவர்.இரா.குணசீலன் said...
இதை நான் எதிர்பார்க்கவே இல்லை நண்பரே..
எள்ளல் கலந்த நடையில் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..
எல்லோர் வாழ்விலும் இப்படியொரு நிகழ்ச்சி நடந்திருக்கும்..!
இன்பம் மட்டுமே கொண்டதல்லவே வாழ்க்கை..//

மிக்க நன்றி முனைவரே... வருகைக்கும் கருத்திற்கும்...

//Blogger கலகலப்ரியா said...
=)))... choo... sry balasi..//

நன்றி லகலகப்பிரியா...

க.பாலாசி said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
:) இது மாதிரி எங்க பக்கத்துவீட்டுல ஒருத்தங்க அவங்க ம்களை அடிச்சி வாசலில் நிறுத்துவாங்க.. விளக்கமாத்து அடிய அப்பத்தான் பாத்துருக்கேன்.. அவங்க ரெண்டு பேருக்கும் எங்க வீட்டு கேலண்டரில் என்னைக்கெல்லாம் தனலாபம்ன்னு இருக்கோ அன்னிக்கெல்லாம் அடி விழுதுன்னு ஒரு நம்பிக்கை.. வேற//

அப்ப லாபமடின்னு சொல்லுங்க... நன்றிக்கா...

//Blogger கமலேஷ் said...
சிரிக்க முடியாம வயறு வலிக்கிது...என்ன உட்ருங்க....//

ஓடாதீங்க... நன்றி கமலேஷ்..

//Blogger பிரியமுடன்...வசந்த் aid...
ஹா ஹா ஹா
:-)))//

நன்றி வசந்த்...

//Blogger seemangani said... ஹையோ....ஹையோ....என்னத்த சொல்ல அதான் நம்ம அண்ணாச்சிங்க...இந்த வாறு வாறிடான்களே...
ஹ..ஹ....ஹ.... முடியலபா...
வாழ்க வளமுடன்......//

ம்ம்ம்... நன்றி நண்பரே....

//Blogger Chitra said...
...........சிரிப்போ சிரிப்பு.//

நன்றி சித்ரா...

க.பாலாசி said...

//பா.ராஜாராம் said...
பாலா சார்,கதிர்..
:-))))
இடுகையும்..
:-))))))))//

நன்றி பா.ரா. தலைவரே..

//Blogger பிரபாகர் said...
பாலாசி,
உங்களுக்கும் ரெட்ட சுழியா?
லவட்டின மேட்டர் ரொம்ப சுவராஸ்யமா இருந்துச்சி...
பிரபாகர்.//

நன்றி பிரபாகர்...

//Blogger பொன். பழனிசாமி said...
அரசியல்வாதி ஆகியிருந்தா நானெல்லா பதிவு போடமுடியாதல்ல.//

ஹா..ஹா..இது நல்லாருக்கே... வாங்க அப்பரே...

//Blogger Romeoboy said...
சூப்பர் கொங்கு பாஷை தலைவரே ..//

இது கொங்கு இல்லீங்கோ.

// என்ன பண்றது உங்கள அடிச்சி அடிச்சி அவரு கை வீங்கி இருக்கும் .//

ம்ம்ம்.

// இப்ப மட்டும் என்ன விளங்கிடா மாதிரி ..//

அட கரைட்டா சொல்றீங்களே... நன்றி நண்பரே...

//Blogger புலவன் புலிகேசி said...
உங்க அப்பா பயங்கரமா யொசிச்சு உங்களையே அடிச்சிக்க சொல்லி அசத்தி புட்டாரே...//

இது அசத்தலா???

// உங்கப்பா நல்ல காரியம் தான் பன்னிருக்காரு..//

அப்டிங்கிறீங்களா?? நன்றி நண்பா..

அன்பேசிவம் said...

நண்பா, இடுகை அருமையக இருக்கிறது. அதுவும் உங்கள் வட்டார மொழியினை அசலாக எழுத்தாக்கியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.

என்னோடு ஒப்பிடும்போது இதெல்லாம் சும்மா... ஜுஜூபி.

நானெல்லாம் வீட்டுக்கு வெளியிலே ஒரு உண்டியலை புதைச்சு வச்சி ஆட்டைய போட்ட காச வச்சே கிரிகெட் பேட் வாங்கினவன்.. ஹே ஹே.....

உங்கப்பாவும் எங்கப்பாவோடு ஒப்பிடும்போது ஜுஜூபிதான்.. யப்பா என்னா அடி....

க.பாலாசி said...

//kannaki said...
பாலாஜி..... முடியலே. கொஞசம் கேப் விட்டு விட்டு சொன்னீங்கன்னா சிரிப்ப நிற்த்தி மூச்சுவிடமுடியும்...???? }//

நான் அடிவாங்குனது அந்தளவுக்கு காமடியாயிடுச்சா???? இருக்கட்டும்...

நன்றி கண்ணகி...

//Blogger தமிழரசி said...
யப்பா சிரிக்க முடியலை....திருடினது தான் திருடினீங்க ஒரு 25000, அல்லது ஒரு 250000, இப்படி திருடியிருக்கலாமே?//

ம்கும்...25 பைசாவுக்கே இப்டி..

// ஐய்யோ நான் அமைதியான ுள்ளங்கன்னு நினைச்ச கதிரும் வானம்பாடியும் அடிச்ச கும்மி பதிவை மிஞ்சிவிட்டது.....//

யாரு இவங்க அமைதியானவங்களா????

//Blogger குடந்தை அன்புமணி said...
ரொம்பத்தான் ஓட்டுட்டீங்க கதிரண்ணா... பாவம் பாலாசி...//

ம்ம்ம்.. பாருங்கண்ணா...

வருக வணக்கம்...நன்றி...

க.பாலாசி said...

//முரளிகுமார் பத்மநாபன் said...
நண்பா, இடுகை அருமையக இருக்கிறது. அதுவும் உங்கள் வட்டார மொழியினை அசலாக எழுத்தாக்கியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.
என்னோடு ஒப்பிடும்போது இதெல்லாம் சும்மா... ஜுஜூபி.
நானெல்லாம் வீட்டுக்கு வெளியிலே ஒரு உண்டியலை புதைச்சு வச்சி ஆட்டைய போட்ட காச வச்சே கிரிகெட் பேட் வாங்கினவன்.. ஹே ஹே.....
உங்கப்பாவும் எங்கப்பாவோடு ஒப்பிடும்போது ஜுஜூபிதான்.. யப்பா என்னா அடி....//

அப்படின்னா இன்னொரு அரசியல்வாதியும் அவுட்டுன்னு சொல்லுங்க... சரிதான். நம்மளோட முன்னேற்றத்த தடுக்கறதே இந்த அப்பாக்களுக்கு பொழப்பா போச்சு...

நன்றி நண்பா...

க.பாலாசி said...

// வானம்பாடிகள் said...
ஈரோடு கதிர் said...
/ அதுசரி.... நா யூத்து.. வானம்பாடிய அமைதியான புள்ளைனு சொல்றது கொஞ்சம் ஓவரா இல்லையா பாட்டிமா!!//
அதென்ன நா யூத்து! அப்ப நாங்க யாரு. பாலாசி போட்ட படத்துல இருக்குறத விட ஒரு 2 வயசு கூட இருக்கலாம். அம்புட்டுதான். யூத்தாம்ல.//

தலைவரே... இதெல்லாம் நாங்க சொல்லணும்....

மகா said...

அருமையான பதிவு ..வாழ்த்துக்கள் .....பாலாசி..

சினிமா புலவன் said...

நல்ல பதிவுங்க

goma said...

க.பாலாசி
கடைசியிலே அரசியல்வாதிங்களுக்கு வச்சுட்டீங்களே ஆப்பு!!!!!!சூப்பராப்பு...
நீங்க அரசியல்வாதியா மட்டும் வந்திரிருந்தீங்கன்னா ஓட்டு போடுவதில்
மீ....தி...ஃபர்ஸ்ட்

சத்ரியன் said...

//அப்டியும் பாருங்க மூணாவது வீட்டு பனங்கொட்ட (அந்த ஃபிகரோட தலமுடி அப்டி இருக்கும்) பாத்துடுச்சு. ஃபியூச்சர்ல அதுதான் நமக்கு ஹீரோயினா ஆயி, பெறவு உயிராவும் மயிராவும் நெனச்சிகிட்டு இருக்கவேண்டியதாப்போச்சு. //

பாலாசி,

இதுதான் ‘அந்த’ பழைய நெனப்பா...? அப்ப சரிதான்....ஆத்துல இடுகைய படிக்கிற பழக்கமுண்டா?

//. நான் திருனுடத மட்டும் எப்பாரு கண்டுக்காம வுட்டுருந்தாருன்னா.... இன்னேரம் நானும் ஒரு ‘நல்ல’ அரசியல்வாதியா ஆகியிருப்பேன்.//

மவனே “பஞ்ச்’ -சு. ஆசைப் படலாம். பேராசை..? கூடவே கூடாது.

அரசூரான் said...

பாலாசி, ரெட்டை சுழின்னு சொன்னீங்க ஆனா ஒத்தையால்ல இருக்கு... ஹி... ஹி... உங்க வளையோட தலைப்ப சொன்னேன். இனி சி @@ பாலாசி-ன்னு போடுங்க... ரொம்ப பொருத்தமா இருக்கும்

Sadagopal Muralidharan said...

இது ஒரு உருவகமாகச்சொல்லப்பட்ட கருத்தாக இருந்தால், நல்ல செய்தி.

இல்லையென்றால், இதையே அப்பாவிடம் படிக்குமாறு அல்லது படித்துக்காட்டிஒப்புதல் வாங்கி மறுவெளியீடு செய்யவும். அவர் ஒத்துக்கொள்ளவில்லயென்றால் மறுப்பு வெளியிடவும்.

ஆனாலும் நல்ல நடை.

க.பாலாசி said...

//மகா said...
அருமையான பதிவு ..வாழ்த்துக்கள் .....பாலாசி..//

நன்றி மகா...

//Blogger சினிமா புலவன் said...
நல்ல பதிவுங்க//

நன்றி நண்பா..

//Blogger goma said...
க.பாலாசி
கடைசியிலே அரசியல்வாதிங்களுக்கு வச்சுட்டீங்களே ஆப்பு!!!!!!சூப்பராப்பு...
நீங்க அரசியல்வாதியா மட்டும் வந்திரிருந்தீங்கன்னா ஓட்டு போடுவதில்
மீ....தி...ஃபர்ஸ்ட்//

அட பார்றா... ம்ம்...நன்றிங்க..

//Blogger சத்ரியன் said...
பாலாசி,
இதுதான் ‘அந்த’ பழைய நெனப்பா...? அப்ப சரிதான்....ஆத்துல இடுகைய படிக்கிற பழக்கமுண்டா?//

அது இல்லங்கற தைரியத்துலத்தான இப்டி..

// மவனே “பஞ்ச்’ -சு. ஆசைப் படலாம். பேராசை..? கூடவே கூடாது.//

ஹா..ஹா...இது பேராசையா???

நன்றி சத்ரியன்...

//Blogger அரசூரான் said...
பாலாசி, ரெட்டை சுழின்னு சொன்னீங்க ஆனா ஒத்தையால்ல இருக்கு... ஹி... ஹி... உங்க வளையோட தலைப்ப சொன்னேன். இனி சி @@ பாலாசி-ன்னு போடுங்க... ரொம்ப பொருத்தமா இருக்கும்//

ஹி..ஹி....நன்றிங்க அரசூரான்..

க.பாலாசி said...

//Sadagopal Muralidharan said...
இது ஒரு உருவகமாகச்சொல்லப்பட்ட கருத்தாக இருந்தால், நல்ல செய்தி.
இல்லையென்றால், இதையே அப்பாவிடம் படிக்குமாறு அல்லது படித்துக்காட்டிஒப்புதல் வாங்கி மறுவெளியீடு செய்யவும். அவர் ஒத்துக்கொள்ளவில்லயென்றால் மறுப்பு வெளியிடவும்.
ஆனாலும் நல்ல நடை.//

இது என் சிறுவயதில் நடந்த நிகழ்வு. தன் பையன் திருடக்கூடாது என்ற நினைப்பில் எங்கப்பா செய்த செயல்கள் இவை. அதுக்கப்பறம் நான் திருந்தியதென்னவோ உண்மை.

சிறுவயது ஞாபகங்களில் சிலது மட்டும் எப்போதும் ஞாபகமாய் இருக்குமே...அதுபோல என் உள்ளுணர்வுகளில் எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கும் நினைவு இது... அதை கொஞ்சம் நகைக்கலந்து சொல்லியிருக்கிறேன். அவ்வளவுத்தான்...

நன்றி வருகைக்கும் கருத்திற்கும்...

"உழவன்" "Uzhavan" said...

அப்பவே 100, 200னு திருடியிருக்கனும்.. உங்க அப்பா ஒன்னும் செஞ்சிருக்கமாட்டாரு. அதவிட்டுட்டு இப்படி சீப்பா... :-)

cheena (சீனா) said...

அன்பின் பாலாசி

கொசுவத்தி அருமை - நல்லா படிச்சு வுழுந்து வுழுந்து சிரிச்சேன் - கதிர் பாலா கும்மி சூப்பர் - விளக்கமாத்தடி வாங்கும் போது கூட ஃபிகர நோட்டம் வுட்றியே - உனக்கு ரெட்ட சுழியா - இல்ல எத்தன சுழி

ம்ம்ம்ம்ம் - குவார்ட்டரோடவந்த அப்பா மட்டையானதுக்கப்பறம் தான் உசுரே வந்திச்சா

நல்ல ரசிச்சு கற்பனை ( உண்மைக்கதையா ) பண்ணி எழுதி இருக்கே - பாராட்டுகள்

நல்வாழ்த்துகள் பாலாசி

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO