நினைத்துப் பார்க்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய அலைபேசிக்கு ஒரு பழக்கமிருக்கிறது, எப்போதும் ஊமையாகவே இருப்பது. அதற்கு அடிமையாகாமல் என்னை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கதைவிட்டாலும் அந்தளவிற்கு எனக்கு அழைப்புகள் வருவதில்லையென்பது உண்மை. மேலும் சீக்குவந்த கோழியின் தலைபோல அலைபேசியில் பேசிக்கொண்டேயிருப்பதும் எனக்கு பிடிக்காத செயல்தான். இந்த இரண்டு நாட்களாக என் அலைபேசி ‘சிரித்து’க்கொண்டேதானிருந்தது. சங்கமத்தைப்பற்றிய அழைப்புகள் மற்றும் கலந்துகொள்ளும் நண்பர்களின் அழைப்புகளென்று இந்த திருவிழாவில் பங்கேற்ற பெருமை என் அலைபேசிக்கும் உண்டு. இரட்டிப்பு மகிழ்ச்சி இப்போது உள்ளது. இப்படியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த பதிவர்கள் மற்றும் வாசகர்கள் எல்லோரையும் முதற்கண் வணங்குகிறேன்.
ஒரு பெரிய மலையை இரண்டுகைகளினால் புரட்டிப்போட்டதுபோன்ற பிரமிப்புணர்ச்சி எங்கள் குழும உறுப்பினர்கள் அனைவருக்கும் இருக்கிறது. இந்த முல்லைச்செடியை வளர்த்தது நாங்கள்தானென்றாலும் தேர்கொடுத்தவர்கள் நீங்கதானே. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் எங்களின் சங்கமத்தில் இத்தனைப் பதிவர்கள் கலந்துகொண்டதையெண்ணி மிகவும் மகிழ்கிறேன். நாட்கள் நெருங்கநெருங்க எனக்கு கொஞ்சம் பயம் எடுக்கத்தான் செய்தது. எங்களது ஏற்பாடுகள் அனைவரையும் திருப்திப்படுத்தவேண்டுமே என்கிற இதயத்துடிப்புதான் அதற்கு காரணம். இப்போது வருகைதந்தோர் ஒவ்வொருவரும் இதைப்பற்றி சிறப்பாக கூறும் போது எங்களது உழைப்பு பயனுள்ளதாகிவிட்டது என்ற திருப்தியும் ஒட்டிக்கொண்டுள்ளது.
எங்களது உழைப்பு என்பது இந்நிகழ்வில் மிக மிக குறைவுதான். ஒவ்வொருவருடைய வாழ்த்தும் வருகையும் இந்த நிகழ்ச்சியின் வெற்றியில் அடங்கியுள்ளது. ஏதோவொரு சந்திப்பு நடைபெறுகிறது நமக்கென்ன என்றில்லாமல் இந்த சந்திப்பில் அவசியம் கலந்துகொள்ளவேண்டும் என்று சிரத்தையெடுத்துக்கொண்டு வருகைபுரிந்த பதிவர்கள் மற்றும் வாசகர்கள், மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டவர்களுக்கும், இந்த நிகழ்ச்சிக்கு அனைத்துவகையிலும் உதவியவர்களுக்கும் எனது நன்றியை தனிப்பட்ட முறையிலும், குழுமத்தின் சார்பாகவும் தெரிவிக்கிறேன்.
குறிப்பாய் இம்மாபெரும் விழாவிற்கு வருகைதந்த பெண் பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறேன்.
நன்றி என்னய்யா பெரிய நன்றி... கண்கள் பனித்ததும் இதயம் இனித்ததும் (கலைஞர் உபயம்) எப்படியென்று மனதார உணர்ந்தேன். எல்லோருக்கும் இப்படித்தானே இருந்திருக்கும்...
சங்கமத்தில் கலந்துகொண்டவர்கள் பட்டியல்
சங்கமம்‘2010 படங்களைக் காண இந்த சுட்டியை சொடுக்கவும்
.

நன்றி...நன்றி...நன்றி சொந்தங்களே!!!!
சங்கமத்தில் கலந்துகொண்டவர்கள் பட்டியல்
மேலும் விரிவான இடுகை ஈரோடு கதிர் அவர்கள் பக்கத்தில்