க.பாலாசி: சில முரண்கள்...ஒரு பார்வையில்...

Saturday, August 1, 2009

சில முரண்கள்...ஒரு பார்வையில்...

.

பூரண மதுவிலக்கே

நமது லட்சியம்

அதற்காக எந்த போராட்டத்துக்கும்

நாம் தயாராக இருக்கவேண்டும்

உரையை முடித்தார் தலைவர்.

உறுதிமொழி ஏற்றான் தொண்டன், அரை போதையில்.


*****


மகனை தந்தையுடன்

தாயை மகனுடன்

தம்பியை அண்ணனுடன்

மனைவியை கணவனுடன்

இளைஞியை இளைஞனுடன்

உரசவிட்டு முகம் மலரும் வேகத்தடைகள்.

அதை கண்டவுடன் முகம் சுலிக்கும் வாகன ஓட்டிகள்.


*****


பெண்களின் சுதந்திரத்திற்காக

போராடும் கட்சியின்

தொண்டர் அவர்.

பெண்களின் இடவொதுக்கீடு

சம்பந்தமான போராட்டத்தில்

தீக்குளிக்கவும் தயங்காதவர்.

அவர் செல்லும் பேருந்தில்

ஜன்னலோரத்தில் மட்டுமே அமர்வார்.

அந்த இருக்கையின் மேலே

‘மகளிர் மட்டும் என்றிருக்கும்.


*****

அய்யா...

தருமம் பண்னுங்கைய்யா...என்று

தட்டை நீட்டும் முதியவரிடம்

இருந்து தப்பித்து

கோயிலுக்குள் செல்லும்

செல்வந்தர்,

தீபாராதணை முடிவில்

ஐயரின் தட்டில் 5 ருபாயை

கேட்காமலேயே போடுகிறார்.


****


முதல் தேதியிலேயே

ஊதியம் வழங்கும்

பெரிய நிறுவனம் அது.

அலுவலக வாசலில் மட்டும்

‘சம்பள ஆள் இல்லை

என்ற வாசகம் இருக்கும்.
*****

10 comments:

ஈரோடு கதிர் said...

// ஐயரின் தட்டில் 5 ருபாயை
கேட்காமலேயே போடுகிறார். //

அப்போ..... உண்டியலிலே போடுகிற பணம்

priyamudanprabu said...

உறுதிமொழி ஏற்றான் தொண்டன், அரை போதையில்.
////

ஹா ஹா

இவனுக எப்பவுமே இப்படித்தான்

priyamudanprabu said...

// ஐயரின் தட்டில் 5 ருபாயை
கேட்காமலேயே போடுகிறார். //

அப்போ..... உண்டியலிலே போடுகிற பணம்

priyamudanprabu said...

இருப்பது ஈரோடா??
இந்தியா வரும்போதெல்லாம் நான் கண்டிப்பாக ஈரோடு வருவது வழக்கம்
அங்கே என் சகோதரி குடும்பம் உள்ளது
இப்ப ஈரோட்டில் புத்தக கண்காட்சி
என் மாமா எனக்காக 10 புத்தகங்கள் வாங்கிவைத்துல்ளார்
நீங்க சென்றீங்களா

Sadagopal Muralidharan said...

அருமை.
கடவுளும்(!) மனிதனும் ஒன்று சேர்கிற இடம்.
வியாபாரியும் மனிதனும் ஒன்று சேர்கிற இடம்.
கடவுளும் (!) வியாபாரியும் ஒன்று சேர்கிற இடம்.
அரசியல் வா(வியா)தியும் மனிதனும் ஒன்று சேர்கிற இடம்.
அரசியல் வா(வியா)தியும் கடவுளும்(!) ஒன்று சேர்கிற இடம்.

நன்றாக சொன்னீர்கள். கோவிலின் பயன்பாடு மகாகவி சொன்னது போல ஆக்கப்படும் நாளே நம் நாடு மனிதர்கள் மிகுந்த நாடாகும். அதுவரை பிணம் தின்னும் கூட்டம் நிறைந்த இடம் தான்.

நன்றாக எழுதுங்கள்.

க.பாலாசி said...

கதிர் - ஈரோடு said...
//அப்போ..... உண்டியலிலே போடுகிற பணம்//

அது உபரி..

Blogger பிரியமுடன் பிரபு said...
//ஹா ஹா
இவனுக எப்பவுமே இப்படித்தான்//

உண்மைதான். ஆனால் மா(ற்)றனும்.

Blogger பிரியமுடன் பிரபு said...
//அப்போ..... உண்டியலிலே போடுகிற பணம்

அது உபரி..

நன்றி பிரபு தங்களின் முதல் வருகை மற்றும் சிந்தனை பரிமாற்றத்துக்கு.

க.பாலாசி said...

//இருப்பது ஈரோடா??இந்தியா வரும்போதெல்லாம் நான் கண்டிப்பாக ஈரோடு வருவது வழக்கம் அங்கே என் சகோதரி குடும்பம் உள்ளது இப்ப ஈரோட்டில் புத்தக கண்காட்சி
என் மாமா எனக்காக 10 புத்தகங்கள் வாங்கிவைத்துல்ளார் நீங்க சென்றீங்களா.//

ஆமாம், தற்போது ஈரோட்டில்தான் வசிக்கிறேன். நான் இன்னும் புத்தக திருவிழாவுக்கு செல்லவில்லை. பணிச்சுமை மற்றும் இன்னபிற காரணங்களால். இந்த வாரம் செல்கிறேன். தாங்கள் ஈரோடு வரும்போது தெரியப்படுத்தவும், காணவிழைகிறேன். நன்றி.

க.பாலாசி said...

Sadagopal Muralidharan said...
//மகாகவி சொன்னது போல ஆக்கப்படும் நாளே நம் நாடு மனிதர்கள் மிகுந்த நாடாகும். அதுவரை பிணம் தின்னும் கூட்டம் நிறைந்த இடம் தான்.//

உண்மைதான். அரசியல் எனும் தலையீடு இல்லாமல் இருந்தால் எல்லாம் சுபமாக அமையும் என்பது நான் கண்ட திண்ணம்.

//நன்றாக எழுதுங்கள்.//

உங்களின் வருகை மற்றும் கருத்தினை நன்றியுடன் ஏற்கிறேன்.

கார்த்திக் said...

நல்லதொரு சிந்தனை... அருமை.

க.பாலாசி said...

கார்த்திக் said...
//நல்லதொரு சிந்தனை... அருமை.//

நன்றி கார்த்திக். தங்களின் வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சி.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO