க.பாலாசி: வளர்ந்த கலை.....

Saturday, August 8, 2009

வளர்ந்த கலை.....

தமிழ்மணத்தில் தங்களின் வாக்கினை செலுத்த மேலுள்ள தலைப்பினை அழுத்தவும்.

வளர்ந்த கலை மறந்துவிட்டாள் ஏனடா கண்ணா,
அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா.
குடும்ப கலை போதும் என்று கூறடா கண்ணா-அதில்
கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா?


இப்படி சொன்னா எப்புடி. வாங்க தெரிஞ்சிக்கலாம்.

1682 ல் ஜெர்மனி நாட்ல பொறந்து 1706 ல் கடல்வழி மார்க்கமா தரங்கம்பாடி மண்ணில் கால வச்ச பார்த்தலோமியோஸ் சீகன்பால்கு-ன்ற புண்ணியவான் பின்னாடி 1710 ல் ஜெர்மனிலேர்ந்து அச்சு எந்திரத்தை கொண்டுவர ஏற்பாடு செஞ்சு, கொண்டுவரப்பட்ட அச்சு எந்திரம் தான் மேலே உள்ள படம். அவரோட படம் தான் கீழ இருக்கு.

என்னோட கண்ணுக்கு என்னமோ, ஜாலியன் வாலாபாக்ல நடந்த படுகொலைக்கு காரணமான ஜென்ரல் டயர் மாதிரி தெரியுராரு. ஆனா ரொம்ப நல்ல மனுஷனுங்க. இவரு வந்த புதுசுல தரங்கம்பாடிய (ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்) ஆன்டுகிட்டு இருந்த மன்னனால கொஞ்சம் துன்புருத்தப்பட்டிருக்கார். அப்பறம் எல்லாம் சரியாகி அந்த பகுதியில இருந்த நம்ம மக்களின் அறியாமையை போக்கி கிருத்தவ இயக்கத்தை வளர்த்திருக்கார். (இவர் அடிப்படையில ஒரு மத போதகர்). இன்னொரு குறிப்பிட வேண்டிய விஷயம் வந்த 11ம் வது நாள்லேர்ந்து இவர் தமிழ் கத்துக்க ஆரம்பிச்சாராம். எத்தனை நாள்ல கத்துகிட்டார்னு தெரியல.

அச்சு எந்திரம் கொண்டாந்தது மட்டுமில்லாம, பொறையாரு (நான் கல்லூரி பயின்ற இடம் ,தரங்கம்பாடிக்கு ஒரு கிலோமீட்டர் முன்னதாக உள்ள ஊர்) பேப்பர் பேக்டரிய (காகித பட்டறை) உண்டாக்கி, மரக்கூழ் மூலமா காகிதம் தயாரிக்க வழிசெஞ்சிருக்கார். இதுவும் அதே காலகட்டத்துல நடந்ததுதான். அந்த எடத்துக்கு இன்னமும் கடுதாசிப்பட்டறைங்கற பேர்தான் இருக்கு. அப்பறம் 1715 ல் தமிழ்மொழியில புதிய ஏற்பாட்டை (பைபிள்) வெளியிட்டிருக்கிறார். இவரோட முயற்சியால தான் இந்தியாவிலேயே முதல் முறையா தமிழ் அச்சுக்கள் உருவாயிருக்கு. ஆனா நம்மல்ல பலபேருக்கு தெரியல. இன்னைக்கு பிரிண்டிங்றது எவ்வளவோ வளர்ச்சியடைஞ்சிடுச்சு. எத்தனயோ விதமான பிரிண்டிங் முறைகள் இருக்கு. ஆனா இதுக்கெல்லாம் ஆணிவேரு இந்த தரங்கம்பாடியில தான் உருவாயிருக்கு. ஒருவேல அவரு கொண்டு வரலேன்னா, வேற யாராவது கொண்டாந்திருப்பாங்க. ஆனா முதல்ல (இந்தியாவுல) அச்சில் ஏறுன பெருமை தமிழுக்கு கெடைச்சுருக்காது.

இவரு அதேநேரத்துல தரங்கம்பாடியில ஒரு தேவாலயத்த 1718 ம் வருஷம் கட்டிவச்சிருக்காரு. அடுத்த வருஷமே செத்து போயிட்டார். இவருடைய ஆயுளை கடவுள் 37 ஓட நிறுத்திட்டார். அவரோட சேவை அவங்களுக்கும் தேவையா இருந்திருக்கும் போலருக்கு. ஆனா 80, 90 வயசுலையும் அரசியல் பண்ற ஆளுகள மட்டும் விட்டுவச்சிடுறார். ஏன்னுதான் தெரியல.

நான் காலேஜ் படிக்கறச்சே கட் அடிச்சிட்டு இந்த கடற்கரையில தான் காத்து வாங்குவேன். அப்போதைக்கு இந்த தேவாலயத்தப் பாத்து பிரமிச்சிருக்கேன். கிட்டத்தட்ட 291 வருஷம் ஆகுது அந்த சர்ச்சை கட்டி. எவ்வளவு மலைப்பான விஷயம். இன்னமும் அதே பொலிவோட இந்த சர்ச் இருக்கறதா சொல்றாங்க. எனக்கு தெரியல. நான் பாத்தது 2000-2003 கால இடைவெளியில.(அதுக்கப்பறம் இந்த இடத்த விட்டு பிரிய மனமில்லாம இன்னும் ரெண்டு வருஷம் படிசேன்ங்கறு வேற விஷயம்)

(வேற நல்ல படம் வலையில மாட்டல)

சரி நான் சொல்ல வந்தத மறந்துட்டேனே. இப்படி உருவான அச்சு கலை வரலாறு, பிரஸ் வச்சிருக்குற, பிளக்ஸ் பிரிண்ட் போடுற, பிளக்ஸ் பிரிண்டுல கைய ஆட்டிகிட்டே நடந்து வர்ர.... நம்மாளுக எத்தனை பேருக்கு தெரியும்னு தெரியல. ஆனா குறைந்தபட்சம் தெரிஞ்சி வச்சிருக்கனும்ங்கறத்துகாக இந்த பதிவு.

வரலாறுகளைப் படிக்கும் போதும், அதை தெரிந்து கொள்ளும் போதும் எனக்கு ஒரு விதமான பிரமிப்பு ஏற்படும். அதை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. இங்கே குறிப்பிட்டுள்ள தரங்கம்பாடி எனும் ஊர் நாகை மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை ஓரம் அமைந்துள்ளது, மற்றும் எனது சொந்த ஊரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது. சிலப்பதிகாரம் கண்ட பூம்புகாரின் சிறப்பு இன்னும் இந்த ஊருக்கு கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. பார்க்கப்போனால் பூம்புகாரும், தரங்கம்பாடியும் சுமார் 15 கி.மீ. (கடல் வழி மார்க்கமாக) தொலைவில் அருகருகே அமைந்துள்ள ஊர்கள், இரண்டுமே பூம்புகார் சட்ட மன்ற தொகுதியில் அமைந்த ஊர்கள். இரண்டுமே சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகள். பூம்புகாருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இன்னும் தரங்கம்பாடிக்கு கிடைக்கவில்லை, ஏனென்றுதான் தெரியவில்லை.

இங்கே இன்னொரு சிறப்பும் உள்ளது. அது டேனிஷ் கோட்டை. அதைப்பற்றி வரும் பதிவில் முடிந்தவரை சொல்கிறேன்.


•••••••••

13 comments:

ஈரோடு கதிர் said...

ஆஹா நம்ம மேட்டர இருக்கே..

இதெல்லாம் தெரியாம தான் நானும் 15 வருசமா அச்சு துறையில இருக்கேன்...

நன்றி பாலாஜி...

அதென்ன 80, 90 வயசு மேல அந்த காந்து....

அப்புறம் ஃபிளக்ஸ்ல கைய ஆட்றது...

நிறைய உள்குத்து குத்துறீங்க பாலா...ஜி

ஆனாலும்... ஒரு வரலாறை சுலபமாக எழுத வருகிறது உங்களுக்கு...

இன்னொரு ரெண்டு வருசம் பாசக்கார புள்ளையா படிச்சிருக்க வேண்டியது தானே....

Cable சங்கர் said...

நல்ல, இன்பர்மேடிவான பதிவு பாலாஜி..

Sadagopal Muralidharan said...

நல்ல ஒரு பயணக்கட்டுரை என்றே சொல்ல வேண்டும்.
எனக்கு நல்ல வேளையாக இந்த இடத்தைதெரியும். நான் சென்று இருக்கிறேன். சிறிது வரலாற்றுப்பிரியம் எனக்கும் உண்டு.
நன்றாக எழுதுகிறீர்கள் பாலாசீ. தொடரட்டும் உங்கள் பயணமும் அதைச்சார்ந்த பதிவுகளும். ஒரே ஒரு கருத்து - இது போன்ற பதிப்பில் தேவையில்லாத அரசியல் மற்றும் இதர கலப்புகள் தவிர்க்கப்பட்டால் ஒரு உயரிய படைப்பாகக்கொள்ளப்படும்.
மேலும் இதற்கு பின்னூட்டங்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு (திரைப்படம் சார்ந்த பதிவுகளுக்கே முன்னுரிமை என்பதால் குறிப்பிட்டேன்) இல்லையென்று நிறுத்திவிடாதீர்கள்.

வால்பையன் said...

நீங்கள் ஊடக்கத்துறைய சேர்ந்தவரா நண்பரே!

க.பாலாசி said...

கதிர் - ஈரோடு said...
//ஆஹா நம்ம மேட்டர இருக்கே..
இதெல்லாம் தெரியாம தான் நானும் 15 வருசமா அச்சு துறையில இருக்கேன்...//

அதனாலதான் சொல்லியிருக்கேன்.

// அதென்ன 80, 90 வயசு மேல அந்த காந்து....அப்புறம் ஃபிளக்ஸ்ல கைய ஆட்றது...நிறைய உள்குத்து குத்துறீங்க பாலா...ஜி//

என்ன பண்றது, இயல்பா வருது.

//ஆனாலும்... ஒரு வரலாறை சுலபமாக எழுத வருகிறது உங்களுக்கு...//

நன்றி தங்களின் பாராட்டுதல் மற்றம் வருகைக்கு.

//இன்னொரு ரெண்டு வருசம் பாசக்கார புள்ளையா படிச்சிருக்க வேண்டியது தானே....//

படிச்சிருப்பேன், கடமை என்னை அழைத்துவிட்டது.

//Cable Sankar said...
நல்ல, இன்பர்மேடிவான பதிவு பாலாஜி.//

நன்றி கேபிளய்யா.

//Sadagopal Muralidharan said...
நல்ல ஒரு பயணக்கட்டுரை என்றே சொல்ல வேண்டும்.
எனக்கு நல்ல வேளையாக இந்த இடத்தைதெரியும். நான் சென்று இருக்கிறேன். சிறிது வரலாற்றுப்பிரியம் எனக்கும் உண்டு. //

நன்றி தங்களின் வருகைக்கு,
நீங்களும் போயிருக்கீங்களா, சொல்லவேயில்ல. உங்களின் ஆர்வம் கண்டு மகிழ்கிறேன்.

க.பாலாசி said...

//வால்பையன் said...
நீங்கள் ஊடக்கத்துறைய சேர்ந்தவரா நண்பரே!//

இல்லை அன்பரே. நான் பணிபுரிவது, கெமிக்கல் கம்பெனி.

ஆமாம் நாங்கள் கேட்பது சீரியஸாதானே.

வால்பையன் said...

//ஆமாம் நாங்கள் கேட்பது சீரியஸாதானே.//

ஆம் நண்பரே!
மருத்துவமனை வாசலில் தான் நிற்கிறேன்!

:)

க.பாலாசி said...

//ஆம் நண்பரே!
மருத்துவமனை வாசலில் தான் நிற்கிறேன்!//

ச்சோ..சாமி.. என்னாலையும் முடியல. எனக்கும் ஒரு டோக்கன் வாங்கவும்.

வால்பையன் said...

//என்னாலையும் முடியல. எனக்கும் ஒரு டோக்கன் வாங்கவும். //

எனக்கு முன்னாடியே ஈரோடு-கதிர் நிக்கிறார்! அவர்கிட்ட சொல்லுங்க சீக்கிரம் கிடைக்கும்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமை ..நல்லா இருக்கு பதிவு பாலாஜி.. இப்பத்தான் விடுமுறையில் தரங்கம்பாடி போயிருந்தேன் , டேனிஷ் கோட்டையும் முதன் முறையாகப் போயிருந்தேன்.. அழகா இருந்தது .. பூம்புகாரில் கடற்கரையே இல்லை. தரங்கம்பாடியில் ரொம்ப நல்லா இருந்தது...

க.பாலாசி said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...
//அருமை ..நல்லா இருக்கு பதிவு பாலாஜி.. இப்பத்தான் விடுமுறையில் தரங்கம்பாடி போயிருந்தேன் , டேனிஷ் கோட்டையும் முதன் முறையாகப் போயிருந்தேன்.. அழகா இருந்தது .. பூம்புகாரில் கடற்கரையே இல்லை. தரங்கம்பாடியில் ரொம்ப நல்லா இருந்தது...//

நன்றி, முத்துலட்சுமி அக்கா...தங்களின் வருகைக்கு.

ஹேமா said...

அழகான ஒரு பயணப் பதிவு.இந்தியா வந்து நிறைய இடம் பாக்கணும்.
நன்றி பாலாஜி.

க.பாலாசி said...

//ஹேமா said...
அழகான ஒரு பயணப் பதிவு.இந்தியா வந்து நிறைய இடம் பாக்கணும்.
நன்றி பாலாஜி.//

நன்றி ஹேமா...தங்களின் வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு...

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO