க.பாலாசி: குறுநகை...

Tuesday, August 11, 2009

குறுநகை...

மகன்:
அப்பா, எங்க ஸ்கூலுக்கு புதுசா வந்திருக்கிற டீச்சர் செம பிகருப்பா.

அப்பா:
டேய், டீச்சரயெல்லாம் உன் அம்மா மாதிரி நினைக்கனும்டா.

மகன்:
சைக்கிள் கேப்ல நீ பிட் போடாத நைனா...

அப்பா: ??

*********

நான் அகல் விளக்காக இருந்தாலும்
நீ இல்லாமல் என்னால் பிரகாசிக்க முடியாது.

ஆக, உன்னைபோல் ஒரு விளக்கெண்ணை
கிடைத்தது என் பாக்யம்.

*********

கணித ஆசிரியை:
நான் இவ்வளவு நேரம் கிளாஸ் எடுத்ததுல இருந்து என்ன தெரியுது?

மாணவன்:
சாயந்திரம் டியூசன் போறது நல்லதுன்னு தெரியுது.

*********

அவன் பார்வைக்கு
அர்த்தம் தெரிந்த எனக்கு
அவன் பேசிய வார்த்தைக்கு
அர்த்தம் தெரியவில்லை, காரணம்

அவன் பேசியது ஆங்கிலம்.

**********

மனைவி:
இனிமே குடிச்சிட்டு வீட்டுக்கு வராத, உன்ன பாக்க சகிக்கல.

கணவன்:
என்னடி பண்றது, குடிக்காம வந்தா உன்ன பாக்க சகிக்கலயே.

மனைவி: ???

********

பிரிந்த காதல் சேரும் போது
கண்ணீர் மட்டும் பேசும்,

ஆனால் பிரிந்த நட்பு சேரும் போது
க்வாட்டர், கோழிப்பிரியாணி, கோல்டு பில்டர் எல்லாம் பேசும்.

*********

L.K.G. BOY1:
டேய் மச்சான், எங்க அப்பா ரொம்ப பயந்தாகொலியா இருக்காருடா.

L.K.G. BOY2:
எப்டிடா சொல்ற?

L.K.G. BOY1:
எப்ப ரோட கிராஸ் பண்னாலும், என் கைய இருக்கமா புடிச்சிகிறார்டா.


என் செல்லிடப்பேசியில் வந்த சில நகைச்சுவை துணுக்குகளை மட்டுமே இங்கே பகிர்ந்துள்ளேன். சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.


••••••••

16 comments:

வால்பையன் said...

நாந்தான் பர்ஸ்டு!

வால்பையன் said...

எல்லாம் அருமையான ஜோக்குகள்!

வாய்விட்டு சிரித்தேன்!

ப்ரியமுடன் வசந்த் said...

எல்லாமே சிரிப்புதான்......:)

வெட்டிப்பயல் said...

//கணித ஆசிரியை:
நான் இவ்வளவு நேரம் கிளாஸ் எடுத்ததுல இருந்து என்ன தெரியுது?

மாணவன்:
சாயந்திரம் டியூசன் போறது நல்லதுன்னு தெரியுது//

This is too good :)

Beski said...

:)))
எல்லாமே கலக்கல்...

க. தங்கமணி பிரபு said...

ரொம்ப நல்லாயிருக்குங்க பாலாஜி! ரசித்தேன், சிரித்தேன்! என்னமோ குறுஞ்செய்தியத்தானே பதிஞ்சம்னு நினைக்காதீங்க! ப்ளாக்ல ஜோக் அரிது, அதிலும் சக ப்ளாக்கன நக்கலடிக்காத ஜோக் மிகவும் அரிது! நீங்க மிக அரிது டைப்ப பதிஞ்சிருக்கீங்க! வாழ்த்துக்கள்!

ஈரோடு கதிர் said...

//சாயந்திரம் டியூசன் போறது நல்லதுன்னு தெரியுது.//

//எப்ப ரோட கிராஸ் பண்னாலும், என் கைய இருக்கமா புடிச்சிகிறார்டா.//

சத்தமாக சிரித்தேன்....
அருமையாக இருக்கிறது

தொடருங்கள்

Cable சங்கர் said...

அருமை பாலாஜி.. :)))))))

Sadagopal Muralidharan said...

ஆனாலும் நெம்ப சேதாரப்படுதிட்டீங்கோ - வாத்தியார்களையும், வாத்தியாரம்மாக்களையும். நல்லா சிரிச்சுப்போட்டேனுங்க. எனக்கு வயிறு வலிக்குதாக்கும். இப்பிடியே வாரத்துக்கொரு பதிவைப்போட்டுப்போடுங்க. எல்லாரும் சிரிச்சுக்கலாமில்லீங்களா உங்க புண்ணியத்திலே!

க.பாலாசி said...

//வால்பையன் said...
நாந்தான் பர்ஸ்டு!
எல்லாம் அருமையான ஜோக்குகள்!
வாய்விட்டு சிரித்தேன்!//

நன்றி.

//பிரியமுடன்.........வசந்த் said...
எல்லாமே சிரிப்புதான்......:)//

நன்றி வசந்த். தங்களின் முதல் வருகைக்கு.

வெட்டிப்பயல் said...
// சாயந்திரம் டியூசன் போறது நல்லதுன்னு தெரியுது//
This is too good :)//

நன்றி வெட்டிப்பயல் (வேற எப்படி சொல்றதுன்ன தெரியல)தங்களின் முதல் வருகை மற்றம் பாராட்டுதலுக்கு.

க.பாலாசி said...

எவனோ ஒருவன் said...

:)))
எல்லாமே கலக்கல்...

நன்றி தங்களின் வருகை மற்றும் பாராட்டுதலுக்கு.

க. தங்கமணி பிரபு said...
// ரொம்ப நல்லாயிருக்குங்க பாலாஜி! ரசித்தேன், சிரித்தேன்! என்னமோ குறுஞ்செய்தியத்தானே பதிஞ்சம்னு நினைக்காதீங்க! ப்ளாக்ல ஜோக் அரிது, அதிலும் சக ப்ளாக்கன நக்கலடிக்காத ஜோக் மிகவும் அரிது! நீங்க மிக அரிது டைப்ப பதிஞ்சிருக்கீங்க! வாழ்த்துக்கள்!//

வாங்க தங்கமணி சார், தங்களின் வருகை மகிழ்ச்சி. வாழ்த்துக்களால் மிக்க மகிழ்ச்சி.

கதிர் - ஈரோடு said...
//சத்தமாக சிரித்தேன்....

அப்படியா, தனியா சிரிச்சிடாதிங்க, யாராவது தப்பா நினைச்சுடுவாங்க.

//அருமையாக இருக்கிறது
தொடருங்கள்//

நன்றி, தொடர்வோம். (தாங்களும்தான்)

க.பாலாசி said...

Cable Sankar said...
// அருமை பாலாஜி.. :)))))))//

நன்றி கேபிள் அய்யா.

//Sadagopal Muralidharan said...
ஆனாலும் நெம்ப சேதாரப்படுதிட்டீங்கோ - வாத்தியார்களையும், வாத்தியாரம்மாக்களையும்.//

சும்மனாச்சுக்கும்.

//நல்லா சிரிச்சுப்போட்டேனுங்க. எனக்கு வயிறு வலிக்குதாக்கும். இப்பிடியே வாரத்துக்கொரு பதிவைப்போட்டுப்போடுங்க. எல்லாரும் சிரிச்சுக்கலாமில்லீங்களா உங்க புண்ணியத்திலே!//

நானும் அப்படிதான் நினைக்கிறேன். முயற்சிக்கிறேன்.
நன்றி தங்களின் வருகை மற்றும் கருத்திற்கு.

பிரபாகர் said...

நிறைய, படிக்காத புதிய ஜோக்குகள்... அருமை நண்பரே....

பிரபாகர்.

Unknown said...

//மனைவி:
இனிமே குடிச்சிட்டு வீட்டுக்கு வராத, உன்ன பாக்க சகிக்கல.

கணவன்:
என்னடி பண்றது, குடிக்காம வந்தா உன்ன பாக்க சகிக்கலயே.

மனைவி: ??? //
ஹ.... ஹ ....ஹா......சிரிப்பலைதான் .....!!! எல்லாமே அருமை பாலாஜி.....!!!!

க.பாலாசி said...

பிரபாகர் said...
// நிறைய, படிக்காத புதிய ஜோக்குகள்... அருமை நண்பரே....
பிரபாகர்.//

நன்றி பிரபாகர் அய்யா. தங்களின் வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு.

Blogger லவ்டேல் மேடி said...

//ஹ.... ஹ ....ஹா......
சிரிப்பலைதான் .....!!! எல்லாமே அருமை பாலாஜி.....!!!!//

நன்றி. லவ்டேல் மேடி..

Hindu Marriages In India said...

அருமையான ஜோக்குகள்.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO