க.பாலாசி: சீக்கிரமா ஒரு பொண்டாட்டி வேணும்...

Wednesday, August 12, 2009

சீக்கிரமா ஒரு பொண்டாட்டி வேணும்...


இயல்பாக நான் ஊருக்கு செல்லும் போதெல்லாம், அவளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் என் அடிமனதில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும். அப்படித்தான் சென்ற முறை சென்ற போதும் இருந்தது. இன்னும் கொஞ்சம் கூடுதலாக எப்படியாவது கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிடவேண்டும் என்றிருந்தேன். சாதாரணமாக ஒரு காதலன், காதலியிடம் கொடுக்க நினைக்கும் கடன் போல பெருகி கிடந்தன என் ஆசைப் பணங்கள்.

பேருந்தில் பயணிக்கும் போதே இதற்கான சில கற்பனைகளுடன் அளவலாவி, வாயில் வழியும் எச்சிலை அவ்வப்போது துடைத்துக்கொண்டே சென்றேன். எனது ஊரினை நெருங்க நெருங்க இன்னும் கொஞ்சம் நெஞ்சில் படபடப்பு துரத்திக்கொண்டே வந்தது. ஒருவழியாக மயிலாடுதுறையில் இறங்கி எனது ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.

சரியாக இருபது நிமிட அளவில் பேருந்து எனது கிராமத்தினை எட்டியது. மண்ணில் கால் பதிக்கும் ‘மண்ணின் மைந்தன்’ என்ற எண்ணங்கள் எல்லாம் சற்றே ஒதுங்கி என்னை வரவேற்றது. பேருந்திற்கு நிற்கும் சில பள்ளிக்கூட பெண்கள் எல்லாம் என் வரவினை ஆவலுடன் பார்ப்பது போல் தெரிந்தது. இறங்கிய உடன் எல்லோரின் பார்வையும் என்னை மேய்ந்து போக, சற்று நிலைகுலைந்த நான், இன்றும் நாம் அழகோடுதான் இருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். ஒரு வழியாக எல்லோரது கண்களிலும் ஒரு கையொப்பமிட்டு வீட்டிற்கு நடைகட்டினேன்.

பெற்றவர்களின் வழக்கமான உபசரிப்புகளுடன், கொஞ்சம் தூக்கம், கனவு இப்படியே பனிரெண்டு மணியை தாண்டியது. மீண்டும் அவளின் சுவாசம் என்னை எழுப்ப திடுக்கிட்ட நான் திக்கு தெரியாமல் வெளியில் வந்து பார்த்தேன். யாருமில்லை. எல்லாம் கனவென்று உரை(த)பட்டவனாய், முகம் கழுவி, அம்மா தயார் செய்த உணவினை அருந்தினேன்.

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு வெளியில் வந்து அவளின் வீட்டினை பார்த்தேன். அவளின் வீடு என் வீடு இருக்கும் எதிர்சாரியில் பத்து வீடுகள் தள்ளியிருந்ததினால் என் வீட்டின் வெளியே வந்தாலே அவள் வீடு தெரியும். இன்று காணும் போதும் அதே வெறுமை அந்த வீட்டின் வாசற்படியில். எப்போதும் என்னைக்கான அவள் அமரும் இடம் அந்த படிகள்தான். சரியென்று மிதிவண்டியை எடுத்துக்கொண்டு அவள் வீட்டருகே இரண்டு, மூன்று தடவைகள் சுத்தினேன். அப்படியும் அவளை காணவில்லை. அவள் வீட்டிற்கு போன் செய்யவும் தைரியம் இல்லை. ஏனென்றால் அவளின் தந்தை ஒரு காவல்துறை அதிகாரி. அண்ணன் ஒரு உதவாக்கறை, தம்பி ஒரு தண்டச்சோறு... இப்படியே பல பட்டங்களை பெற்றவர்கள் அவள் வீட்டில்.

அப்படி அவள் வீட்டருகே செல்லும்போதெல்லாம், இரண்டு வருடங்களுக்கு முன்னால்....எங்களுடைய விஷயம் அவங்க வீட்டுக்கு தெரிந்து, எங்க வீட்டுக்கும் தெரிந்துபோய், கலகமானதை சற்றே நினைத்துப்பார்த்தேன். அதனால் மூன்றாம் முறையோடு நிறுத்திக்கொண்டு அவள் வீட்டிற்கு அருகில் இருக்கும் அவளின் தோழியை சந்தித்து விவரம் கேட்டேன். அப்போதுதான் அந்த தோழி சொன்னாள்... துபாயிலிருந்து அவள் கணவன் வந்துவிட்டான் என்று....

இப்ப சொல்லுங்க எனக்கு சீக்கிரமா ஒரு பொண்டாட்டி வேணுமா, வேணாமா...?


குறிப்பு: இவ்வளவு தூரம் மெனக்கட்டு டைப் பண்ணி..., தமிழ்மணத்துல இணைக்கலாம்னு ‘அனுப்பு’ ங்ற பட்டன அழுத்துனா ரெண்டு லைனுக்கு கீழ ‘சன்னலை மூடு’ன்னு சொல்லுது. அதப்பாத்தவுடனே எனக்கு ‘மூடிகிட்டு போடா’ங்ற மாதிரி இருக்கு.. இந்த கொடுமைய எங்க சொல்றது. நீங்க வேணும்னா மேல உள்ள தலைப்ப கிளிக் பண்ணி ஓட்டு போட்டு பாருங்க உங்களுக்கே தெரியும்.


••••••••••

17 comments:

ஈரோடு கதிர் said...

//சற்று நிலைகுலைந்த நான், இன்றும் நாம் அழகோடுதான் இருக்கிறோம் என்பதை உணர்ந்தேன்.//

அடக் கடவுளே

//இப்ப சொல்லுங்க எனக்கு சீக்கிரமா ஒரு பொண்டாட்டி வேணுமா, வேணாமா...?//

துபாய்காராரத்தானே கேக்கனும்

ஏம்பா அப்ப பொண்ணு வேணுமா....!!!???

//நீங்க வேணும்னா மேல உள்ள தலைப்ப கிளிக் பண்ணி ஓட்டு போட்டு பாருங்க உங்களுக்கே தெரியும்.//


ஓட்டு வாங்கற டெக்னிக் சூப்பரு...

பிரபாகர் said...

பாவி மக்கா.... அடுத்தவன் பொண்டட்டிக்குத்தான் அவ்வளோ பில்டப்பா?

கலக்கலா இருக்கு பாலாஜி.... வாழ்த்துக்கள்...

பிரபாகர்.

Unknown said...

// இப்ப சொல்லுங்க எனக்கு சீக்கிரமா ஒரு பொண்டாட்டி வேணுமா, வேணாமா...? ///


அடங்கொன்னியா....!! யோவ் பாலாஜி.... உம்பட கல்யாணத்துக்கு மறக்காம பத்திரிக்க வெய்யி எனக்கு ..... உன்னையும் நம்பி பொண்ணு குடுக்கபோர அந்த ப்ரகஸ்பதிய நேருல பாத்து கொஞ்சம் ஆறுதல் சொல்லோனும்....!!!!

Cable சங்கர் said...

பஸ்ஸ்டாண்டுல இறங்கினதுலேர்ந்து ஒரே கனவாத்தானிருக்கு.

கணவனை முன்னமே எதிர்பார்த்தேன்.

வால்பையன் said...

பொண்ணு பாத்துருவோமா!?

Beski said...

ஜெ மாம்ஸ் இதப் பத்தித்தான் கவிதை எழுதியிருக்கிறாருன்னு நெனைக்கிறேன்...

ரெண்டுபேருமே சரியில்ல...

Thangamani Prabu said...

கலக்கல் பாலாஜி! ரொம்ப நல்லாயிருக்கு! அனுபவிச்சு படிச்சேன்! வாழ்த்துக்கள்!!

ப்ரியமுடன் வசந்த் said...

hahahhaa

கலக்கல் பாலாஜி

க.பாலாசி said...

கதிர் - ஈரோடு said...
// அடக் கடவுளே//

நாம எதுவானாலும் பேசி தீர்த்துக்கலாம்.

//துபாய்காராரத்தானே கேக்கனும்//

ம்ம்ம்....

//ஏம்பா அப்ப பொண்ணு வேணுமா....!!!???//

அட ஆமாங்கய்யா, அய்யோ சாமி...இத சொல்ல எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு.

//நீங்க வேணும்னா மேல உள்ள தலைப்ப கிளிக் பண்ணி ஓட்டு போட்டு பாருங்க உங்களுக்கே தெரியும்.//


//ஓட்டு வாங்கற டெக்னிக் சூப்பரு...//

நன்றி.

க.பாலாசி said...

பிரபாகர் said...
பாவி மக்கா.... அடுத்தவன் பொண்டட்டிக்குத்தான் அவ்வளோ பில்டப்பா? கலக்கலா இருக்கு பாலாஜி.... வாழ்த்துக்கள்...

நன்றி சார். தங்களின் முதல் வருகை மற்றும் பின்னூட்டத்திற்கும்.

Blogger லவ்டேல் மேடி said...
// அடங்கொன்னியா....!! யோவ் பாலாஜி.... உம்பட கல்யாணத்துக்கு மறக்காம பத்திரிக்க வெய்யி எனக்கு ..... உன்னையும் நம்பி பொண்ணு குடுக்கபோர அந்த ப்ரகஸ்பதிய நேருல பாத்து கொஞ்சம் ஆறுதல் சொல்லோனும்....!!!!//

ஹலோ..ஹலோ...

யாரு.. பாலாஜியவா கேக்குறீங்க. அவரு ஊருல இல்லைங்களே. அப்பறமா பேசுங்க.

க.பாலாசி said...

Cable Sankar said...
// பஸ்ஸ்டாண்டுல இறங்கினதுலேர்ந்து ஒரே கனவாத்தானிருக்கு.
கணவனை முன்னமே எதிர்பார்த்தேன்.//

நன்றி தங்களின் வருகைக்கு.

//Blogger வால்பையன் said...
பொண்ணு பாத்துருவோமா!?//

பாத்திடலாமே...

//Blogger எவனோ ஒருவன் said...
ஜெ மாம்ஸ் இதப் பத்தித்தான் கவிதை எழுதியிருக்கிறாருன்னு நெனைக்கிறேன்...//
ரெண்டுபேருமே சரியில்ல...//

அப்படியா?...

நன்றி.

க.பாலாசி said...

Thangamani Prabu said...
// கலக்கல் பாலாஜி! ரொம்ப நல்லாயிருக்கு! அனுபவிச்சு படிச்சேன்! வாழ்த்துக்கள்!!//

நன்றி தங்கமணி சார், வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு.

//Blogger பிரியமுடன்.........வசந்த் said...
hahahhaa

கலக்கல் பாலாஜி//

நன்றி பிரியமுடன் வசந்த்.

க.பாலாசி said...

நான்கு நாட்கள் விடுமுறையில் இருந்ததினால் தங்களின் பின்னூட்டதிற்கு உடனே பதிலூட்டமிட இயலவில்லை. மன்னிக்கவும்.

தங்கள் அனைவரின் வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு மீண்டும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

ஈரோடு கதிர் said...

ஆஹா சிங்கம் மீண்டும் குகைக்கு வந்திருச்சா!

ம்ம்ம்ம் ஆட்டத்த ஆரம்பிங்க

சரி..

அந்த அக்கா நல்லாருக்காங்களா?

க.பாலாசி said...

//ஆஹா சிங்கம் மீண்டும் குகைக்கு வந்திருச்சா!
ம்ம்ம்ம் ஆட்டத்த ஆரம்பிங்க
சரி..
அந்த அக்கா நல்லாருக்காங்களா?//

மறுபடியுமா... முடியல...

மந்திரன் said...

போங்க , நீங்க எப்போவுமே காமடி பீசு தானா ?
ஆனால் எழுத்து நடை , மிக சீரிய கதை ஓட்டம் ..மிக நன்று .

க.பாலாசி said...

//மந்திரன் said...
போங்க , நீங்க எப்போவுமே காமடி பீசு தானா ? ஆனால் எழுத்து நடை , மிக சீரிய கதை ஓட்டம் ..மிக நன்று .//

அப்படி இல்லை நண்பரே.. எப்பவாவது இப்படிதான்.

நன்றி தங்களின் வருகைக்கு.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO