க.பாலாசி: அன்பு படர்ந்த கொம்பினிலே....

Thursday, August 20, 2009

அன்பு படர்ந்த கொம்பினிலே....


சமீபத்தில் ஊருக்கு சென்றிருந்த போது மூன்று பால்ய நண்பர்களை சந்தித்தேன்.

1. முதல் நண்பனுக்கு கல்யாணம் பண்றதுக்கு பொண்ணு அமையலையேன்னு வருத்தம்.
2. இரண்ணடாமவனுக்கு தன்னோட அக்காவுக்கு சரியான மாப்ள அமையிலையேன்னு வருத்தம்.

3. மூன்றாமவனுக்கு காதலிக்கற பொண்ண கட்டிக்க, பொண்ணோட அப்பன் ஒத்துக்கமாட்டுங்கிறானேன்னு வருத்தம்.


1. முதல் நண்பன்ட பேசுறப்ப ‘சரிடா மாப்ல நீங்க என்ன எதிர்பாக்குறீங்க’ அப்டின்னு கேட்டேன். அவன் சொன்னான், முப்பது பவுனும், ஒரு டூ வீலரும்’னான். நான் கேட்டேன் நக்கலா ஏன்டா முப்பது பவுனு கூட ஓ.கே. டூ வீலர் எதுக்குடா, டூவீலர்லேயே வெளிநாட்டுக்கு போவப்போரியா, அதுக்கு பதிலா ஒரு ஏரோப்ளேன் கேக்க வேண்டியதுதானே. அதுவாவது போயிட்டு வரதுக்கு யூஸாவுமேன்னு. வெறித்தனமா ஒரு பார்வ பாத்துட்டு ‘புத்தி சொல்றாராமா’ அப்டின்னு சொல்லிட்டு போயிட்டான். இவனுங்களுக்கெல்லாம் கல்யாணமே ஆவ கூடாதுப்பா அப்டின்னு வேண்டிகிட்டு நானும் கௌம்பிட்டேன்.

2. இரண்டாது நண்பன்ட, ‘ஏன்டா, இன்னுமா உங்க அக்காவுக்கு மாப்ள அமையல அப்டி’ன்னு கேட்டேன். அவன் சொன்னான் ‘எங்கடா, வரவனுவோல்லாம் 30, 40 பவுனு கேட்குரானுவோ, நீங்க டூவீலர் வாங்கி குடுத்தாதான் எங்களால பத்திரிக்கையே வைக்க முடியும்ங்கரானுக. எங்கடா போயி அழுவறது. எங்கப்பா இத கல்யாணம் பண்ணி கொடுக்கறதுக்காகவே இருந்த கெவர்ன்மேன்ட் வேலையை விட்டு, வீ.ஆர்.எஸ் வாங்கி, அதுல வந்த கொஞ்சம் பணத்துல எதோ முடிஞ்சளவு நகையை வாங்கி வச்சிருக்காரு. ஆனா வரவனுக இப்டில்லாம் ஆசப்படுரானுவோ. ஏன்டா பொட்ட புள்ளைகள படிக்க வச்சோம்னு ஆவுது’ அப்டின்னான். மனசுல ஒருவித பாரத்தோட வந்துட்டேன்.

3. மூனாவது நண்பன்ட என்னடா பிரச்சனைன்னு கேட்டா, அவன் சொன்னான் ‘அவ அப்பன் சாதிய பாக்குறான்டா. யாரோ அவளோட மாமங்காரன் ஒருத்தன் துபாய்ல இருக்கானாம், அவனுக்குதான் இவள கட்டிக்குடுக்க போறானாம்’னான். சரிடா பொண்ணு என்னடா சொல்லுதுன்னு கேட்டேன் அவள இப்ப கூப்டா கூட என்னோட வந்திடுவா. ஆனா அவ அப்பன்தான் அப்படி எதாவது நடந்தா தற்கொல பண்ணிப்பன்னு சொல்லி மெரட்டுரானாம். ஒரு பிச்சக்காரனுக்கு வேணும்னாலும் கட்டிக்கொடுப்பானாம், எனக்கு மட்டும் கட்டிக்கொடுக்க மாட்டானாம்’னான். சரி பிச்சக்காரனுக்கு கட்டிகொடுக்கனும்னா கூட 30 பவுனும், டூ வீலரும் கேட்பானேடா’ன்னேன். டூவீலர் எதுக்குடா’ன்னான். ‘வேறெதுக்கு பிச்ச எடுக்கதான்’னேன். கொஞ்சம் சிரிப்புடன் கலைந்து சென்றோம்.

இப்போ நண்பர்களை பற்றின கவலையில்லை எனக்கு, ஏனென்றால் முதல் நண்பனுக்கு எப்படியாவது ஒரு ‘இ’னா. ‘வா’னா மாட்டிடுவாங்க. முப்பது இல்லன்னாலும் ஒரு 20,25 இப்படி கிடைத்துவிடும். இரண்டாவது நண்பனோட அக்காவுக்கு அவங்க அப்பா எப்பாடுபட்டாவது ஒரு வாத்தியார் மாப்பிள்ளையை பாத்து கட்டிவச்சிடுவாரு. மூன்றாவது நண்பன் கொஞ்சம் முயற்சி பண்ணி பார்ப்பான், முடியலைன்னா ‘போடா நீயும் உன் பொண்ணும்’னுட்டு போயிடுவான்.

ஆனால்
இந்த மூன்று நிலைகளிலும் பாதிக்கப்பட்ட பெண்களை நினைத்து பார்த்தேன், எவ்வளவோ கனவுகளோடும் ஆசைகளோடும் வாழ்கிற இந்த வயதினையொத்த பெண்களின் வாழ்க்கை திருமண வயதையடைந்த ஆண்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகிறதே என்று. என்ன செய்வது என்ற ஆதங்கத்துடன் உறங்கிப்போனேன். இடையிடையே பட்டுக்கோட்டையின் இந்த பாடல் தான் ஞாபகம் வந்தது.

செவரு வச்சுக் காத்தாலும்
செல்வமெல்லாம் சேர்த்தாலும்
செத்தபின்னேஅத்தனைக்கும்
சொந்தக்காரன் யாரு? நீ
துணிவிருந்தா கூறு!
ரொம்ப -
எளியவரும் பெரியவரும்
எங்கே போனார் பாரு!

பொம்பள எத்தன?, ஆம்பள எத்தன?
பொறந்த தெத்தன?, எறந்த தெத்தன?,
வம்பில மாட்டி போன தெத்தன?,
மானக்கேடாய் ஆன தெத்தன?

மூச்சு நின்னா....மூச்சு நின்னா முடிஞ்சுதடி
சொந்தம்...
அடியே முத்துக்கனி இதில்
எத்தனை எத்தனை ஆனந்தம்!

காலையில் எழுந்து பார்க்கையில் நாள்காட்டியில் ஆகஸ்ட்15 ‘சுதந்திர தினம்’ என்றிருந்தது, யாருக்கு என்றுதான் புரியவில்லை.


**********

28 comments:

Raju said...

நல்லா எழுதி இருக்கீங்க பாஸ்.
அந்த பாட்டை அல்லது கவிதையை பிதாமகன் விக்ரம் மாதிரி படிச்சு பார்த்தேன்.சூப்பர் எஃபெக்ட்.
:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட எந்த விசயத்திலிருந்து எதை கவனிச்சிருக்கீங்க.. பரவாயில்ல . ..பெண்களைப்பத்தி கவலைப்பட்டு எழுதியிருக்கறத படிக்க மகிழ்ச்சியா இருக்கு.. அப்ப ஒன்னோ ரெண்டோ பெண்ணுக்குகவலை இல்லை.. ( ஒன்னு மனைவி ரெண்டு பெண்குழந்தையா இருந்தா)

குடந்தை அன்புமணி said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
அட எந்த விசயத்திலிருந்து எதை கவனிச்சிருக்கீங்க.. பரவாயில்ல . ..பெண்களைப்பத்தி கவலைப்பட்டு எழுதியிருக்கறத படிக்க மகிழ்ச்சியா இருக்கு.. அப்ப ஒன்னோ ரெண்டோ பெண்ணுக்குகவலை இல்லை.. ( ஒன்னு மனைவி ரெண்டு பெண்குழந்தையா இருந்தா)//

பாலாஜிக்கு இப்படி ‘செக்’ வைக்கிறீங்களே... இது நியாயமா?
இந்த உலகத்திலே ஆணாயிருந்தாலும், பெண்ணாயிருந்தாலும் பிரச்சினை இருக்கத்தான் செய்யுதுங்கிறதுக்கு இந்த இடுகையே உதாரணமாக இருக்குது பாருங்க...(எழுதியதை சொல்ல வில்லை. எழுதப்பட்ட விசயத்தைத்தான் சொல்கிறேன்.)

பிரபாகர் said...

பாலாஜி,

மூன்று நிகழ்வுகள். அதில் உங்களின் பார்வை. ஏற்றார்போல் பட்டுக்கோட்டையாரின் பாடல். இறுதியாய் ஆகஸ்ட் பதினைந்துடன் தொடர்பு படுத்துதல்... அழகாக சுவைபட ஆதங்கத்தோடு பதித்திருக்கிறீர்கள்...

நன்றி நண்பரே, வாழ்த்துக்கள்.

பிரபாகர்.

ஈரோடு கதிர் said...

பாலாஜி

அழுத்தமான ஒரு செய்தியை மிக அழகாக, அதே சமயம் மனதின் ஆழத்தில் பதிவு செய்திருக்கிறது உங்கள் இடுகை...


ஆனால் இது ஒரு விளையாட்டு பாலாஜி
கொடுப்பவனும், கேட்பவனும் நிறுத்தாத வறட்டு கௌரவ விளையாட்டு..

Sadagopal Muralidharan said...

நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம்.
ஆனால் சொந்தக்காலில் நிற்பதற்கும், ஒரு மானமுள்ள மனிதனாய் இருப்பதற்கும் என்றுமே நினைப்பதில்லை. நினைக்கபோவதும் இல்லை.
இந்த பதிவைப்படிக்கும் போது எனக்கு நினைவுக்கு வருவதெல்லாம் இவை தான்.
கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், கீரை, ஆட்டுக்கறி, கோழிக்கறி, மிதிவண்டி, மண், செங்கல், மணல், கரி. இப்படி நினைப்பவனும், நினைக்க வைப்பவனும் உயிரற்றவன்.
நல்ல உள்வாங்கும் திறமையும், அப்படியே அவற்றை ஆராயும் திறமையும் உங்களது வரம்.
தொடரட்டும் உங்கள் இப்படியான மனதைக்கிளரும் பதிவுகள்

வனம் said...

வணக்கம்

நிச்சயம் யோசிக்கவேண்டிய, யோசித்ததை செயல்படுத்த வேண்டிய விடயம்.

இதிலாவது அடுத்தவர்களை இழுக்காமல் தன் வாழ்கை, தன்னால் இது முடியும் என ஒவ்வொரு ஆணும், பெண்னும் முயன்றால் முடியும்

இராஜராஜன்

அன்புடன் அருணா said...

நல்ல பதிவு....

Cable சங்கர் said...

பாலாஜி.. எல்லார் பர்ஷப்ஷனிலும் பார்த்து எழுதியிருக்கிறீர்கள்.. நல்லாருக்கு

மந்திரன் said...

சொல்ல வந்தது ரொம்ப சரி ...

Vidhoosh said...

So sad is this. But reality is what you have narrated.
The sex ratio of 1.06:1 (male:female), the ratio of male to female births, has declined over the past decades.
The days are not far away, that there won't be any female for the next generation males to get married to.

--vidhya

வால்பையன் said...

அர்த்தம் சொறிந்த பதிவு!
வரதட்சணை வாங்கும் ஆண்களுக்கு மணமேடையில் என் விலை இவ்வளவு என்று போர்டு எழுதி கழுத்தில் தொங்கவிட வேண்டும்!

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல இடுகை

பட்டுக்கோட்டையின் வரிகள் பிரமாதம்

கலகலப்ரியா said...

nice 1!

ஹேமா said...

பாலாஜி,அருமை..அருமை.
உணர்வோடு உணரப்பட்ட எழுத்துக்கள்.உங்களைப் போல சிலர் உணர்ந்தாலே பலபேரின் வாழ்வைச் சரிப்படுத்த முடியும்.

Unknown said...

நல்லாருக்கு......

க.பாலாசி said...

//டக்ளஸ்... said...
நல்லா எழுதி இருக்கீங்க பாஸ்.
அந்த பாட்டை அல்லது கவிதையை பிதாமகன் விக்ரம் மாதிரி படிச்சு பார்த்தேன்.சூப்பர் எஃபெக்ட்.//

நன்றி அன்பரே. தங்களின் முதல் வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு..

//Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...
அட எந்த விசயத்திலிருந்து எதை கவனிச்சிருக்கீங்க.. பரவாயில்ல . ..பெண்களைப்பத்தி கவலைப்பட்டு எழுதியிருக்கறத படிக்க மகிழ்ச்சியா இருக்கு.. அப்ப ஒன்னோ ரெண்டோ பெண்ணுக்குகவலை இல்லை.. ( ஒன்னு மனைவி ரெண்டு பெண்குழந்தையா இருந்தா)//

நன்றி முத்துலட்சுமி அக்கா.. உங்களின் முதல் வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு.

//Blogger குடந்தை அன்புமணி said...
// பாலாஜிக்கு இப்படி ‘செக்’ வைக்கிறீங்களே... இது நியாயமா?
இந்த உலகத்திலே ஆணாயிருந்தாலும், பெண்ணாயிருந்தாலும் பிரச்சினை இருக்கத்தான் செய்யுதுங்கிறதுக்கு இந்த இடுகையே உதாரணமாக இருக்குது பாருங்க...(எழுதியதை சொல்ல வில்லை. எழுதப்பட்ட விசயத்தைத்தான் சொல்கிறேன்.)//

அய்யா, என்ன இப்படி சொல்றீங்க. பிரச்சனை என்பது இருவருக்கும்தான் நான் மறுக்கவில்லை. ஆனால் அப்பிரச்சனையினால் உள்ளார்ந்து பாதிக்கப்படுவது யார்? என்பதே என்னுடைய பதிவிடலின் கரு.

நன்றி அன்பரே தங்களின் வருகை மற்றும் கருத்திடலுக்கு.

க.பாலாசி said...

//பிரபாகர் said...
பாலாஜி,மூன்று நிகழ்வுகள். அதில் உங்களின் பார்வை. ஏற்றார்போல் பட்டுக்கோட்டையாரின் பாடல். இறுதியாய் ஆகஸ்ட் பதினைந்துடன் தொடர்பு படுத்துதல்... அழகாக சுவைபட ஆதங்கத்தோடு பதித்திருக்கிறீர்கள்...
நன்றி நண்பரே, வாழ்த்துக்கள்.
பிரபாகர்.//

நன்றி பிரபாகர் அய்யா தங்களின் விரிவான விமர்சனத்திற்கு. இந்த ஆதங்கம் என் அருகாமையில் உள்ளவர்களை பார்த்தே உண்டானது. இன்னும் என் கண்ணுக்கு தெரியாமல் எத்தனையோ.....

//Blogger கதிர் - ஈரோடு said...
பாலாஜி அழுத்தமான ஒரு செய்தியை மிக அழகாக, அதே சமயம் மனதின் ஆழத்தில் பதிவு செய்திருக்கிறது உங்கள் இடுகை...//

நன்றி கதிர் அய்யா அவர்களே..

//ஆனால் இது ஒரு விளையாட்டு பாலாஜி கொடுப்பவனும், கேட்பவனும் நிறுத்தாத வறட்டு கௌரவ விளையாட்டு..//

ஆமாம். இந்த வறட்டு கௌரவ விளையாட்டு பெண்களின் வாழ்க்கையில் அல்லவா விளையாடப்படுகிறது. என்ன செய்வது, குறைந்தபட்சம் என் விளையாட்டாவது இந்த மைதானத்தில் நடைபெறக்கூடாது என்ற ஆதங்கத்தினால் இந்த பதிவு.

நன்றி அன்பரே...

//Blogger Sadagopal Muralidharan said... நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம். ஆனால் சொந்தக்காலில் நிற்பதற்கும், ஒரு மானமுள்ள மனிதனாய் இருப்பதற்கும் என்றுமே நினைப்பதில்லை. நினைக்கபோவதும் இல்லை.
இந்த பதிவைப்படிக்கும் போது எனக்கு நினைவுக்கு வருவதெல்லாம் இவை தான்.கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், கீரை, ஆட்டுக்கறி, கோழிக்கறி, மிதிவண்டி, மண், செங்கல், மணல், கரி. இப்படி நினைப்பவனும், நினைக்க வைப்பவனும் உயிரற்றவன்.//

உண்மைதான் அன்பரே. உங்களின் ஒப்பீடலும் ஒருவித ஆதங்கத்துடனே உள்ளது.

//நல்ல உள்வாங்கும் திறமையும், அப்படியே அவற்றை ஆராயும் திறமையும் உங்களது வரம். தொடரட்டும் உங்கள் இப்படியான மனதைக்கிளரும் பதிவுகள்//

நன்றி சார். முயற்சிக்கிறேன். தங்களின் வருகை மற்றும் கருத்து பகிர்தலுக்கு என்னுடைய நன்றிகள்.

க.பாலாசி said...

வனம் said... வணக்கம்
// நிச்சயம் யோசிக்கவேண்டிய, யோசித்ததை செயல்படுத்த வேண்டிய விடயம். இதிலாவது அடுத்தவர்களை இழுக்காமல் தன் வாழ்கை, தன்னால் இது முடியும் என ஒவ்வொரு ஆணும், பெண்னும் முயன்றால் முடியும் இராஜராஜன்//

நான் உணர்கிறேன். என்வாழ்க்கையில் இவ்விதமான தவறுகளை செய்யாமல் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்.
நன்றி இராஜராஜன் அவர்களே.

//Blogger அன்புடன் அருணா said...
நல்ல பதிவு....//

நன்றி சகோதரி அருணா அவர்களே..

//Blogger Cable Sankar said...
பாலாஜி.. எல்லார் பர்ஷப்ஷனிலும் பார்த்து எழுதியிருக்கிறீர்கள்.. நல்லாருக்கு//

நன்றி கேபிளய்யா.

//Blogger மந்திரன் said...
சொல்ல வந்தது ரொம்ப சரி ...//

நன்றி மந்திரன்...

//வால்பையன் said...
அர்த்தம் சொறிந்த பதிவு!
வரதட்சணை வாங்கும் ஆண்களுக்கு மணமேடையில் என் விலை இவ்வளவு என்று போர்டு எழுதி கழுத்தில் தொங்கவிட வேண்டும்!//

அப்படி செய்யப்படுமாயின் இன்னும் 20 பவுன் அதிகம் கேட்பார்களே. என்ன செய்வது.

நன்றி அன்பரே (வால்பையன்)

//Blogger பிரியமுடன்...வசந்த் said...
நல்ல இடுகை
பட்டுக்கோட்டையின் வரிகள் பிரமாதம்//

நன்றி தோழரே.. தங்களின் வருகைக்கு..

க.பாலாசி said...

//Blogger ஹேமா said...
பாலாஜி,அருமை..அருமை.
உணர்வோடு உணரப்பட்ட எழுத்துக்கள்.உங்களைப் போல சிலர் உணர்ந்தாலே பலபேரின் வாழ்வைச் சரிப்படுத்த முடியும்.//

சரிதான் நான் உணர்ந்தேன்(கிறேன்)

நன்றி..

//Blogger லவ்டேல் மேடி said...
நல்லாருக்கு......//

நன்றி லவ்டேல் மேடி...

க.பாலாசி said...

//கலகலப்ரியா said...
nice 1!//

thanks!

//Vidhoosh said...
So sad is this. But reality is what you have narrated.
The sex ratio of 1.06:1 (male:female), the ratio of male to female births, has declined over the past decades.
The days are not far away, that there won't be any female for the next generation males to get married to.
--vidhya//

Thanks for your comment regarding this topic and your first visit.

சப்ராஸ் அபூ பக்கர் said...

அவர்கள கற்பனை பண்ணிட்டு பாடல பாடிப் பார்த்தேங்க.... அதற்கு மேல நான் எதுவும் சொல்லல....

நல்லா இருந்தது பதிவு, வாழ்த்துக்கள்.....

க.பாலாசி said...

சப்ராஸ் அபூ பக்கர் said...
// அவர்கள கற்பனை பண்ணிட்டு பாடல பாடிப் பார்த்தேங்க.... அதற்கு மேல நான் எதுவும் சொல்லல....
நல்லா இருந்தது பதிவு, வாழ்த்துக்கள்.....//

நன்றி சப்ராஸ் தங்களின் வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு..

க. தங்கமணி பிரபு said...

பாலாஜி, புது டெம்ப்ளேட் அழகாயிருக்குங்க! விட்டுப்போன பதிவுகள படிக்கலாமுன்னு வந்தேன்! இந்தப் பதிவுக்காக நிறிஅய சிந்தித்திருப்பது தெரிகிறது! பத்திரிக்கைல எழுதுங்க - பிரசுரமாகிற நேரம் வந்தாச்சு! எழுத்து சிறுசாயிருக்கு, படிக்க சிரமமாயிருக்கு! எழுத்த்ல்லாம் பெருசு பண்ணுங்க!

வானதி said...

உன்னயே நீ எண்ணிப்பாரு
இந்த ஒலகத்தில் எது சொந்தம்
யோசிச்சு கூறு
உன்னயே நீ எண்ணிப்பாரு

நல்ல சிந்தனை

வானதி said...

பாலாசிக்கு கல்யாண ஆசை வந்துடுச்சா

நீங்க எவ்வளவு கேட்பீங்க பாலாசி?

க.பாலாசி said...

//க. தங்கமணி பிரபு said...
பாலாஜி, புது டெம்ப்ளேட் அழகாயிருக்குங்க! விட்டுப்போன பதிவுகள படிக்கலாமுன்னு வந்தேன்! இந்தப் பதிவுக்காக நிறிஅய சிந்தித்திருப்பது தெரிகிறது! பத்திரிக்கைல எழுதுங்க - பிரசுரமாகிற நேரம் வந்தாச்சு! எழுத்து சிறுசாயிருக்கு, படிக்க சிரமமாயிருக்கு! எழுத்த்ல்லாம் பெருசு பண்ணுங்க!//

நன்றி தங்கமணிசார்...தங்களின் கருத்தினை ஏற்கிறேன்...நன்றி...

//போர்வாள் said...
உன்னயே நீ எண்ணிப்பாரு
இந்த ஒலகத்தில் எது சொந்தம்
யோசிச்சு கூறு
உன்னயே நீ எண்ணிப்பாரு
நல்ல சிந்தனை//

நன்றி நண்பரே...

//போர்வாள் said...
பாலாசிக்கு கல்யாண ஆசை வந்துடுச்சா
நீங்க எவ்வளவு கேட்பீங்க பாலாசி?//

தெரியலையே நண்பா...கேட்ககூடாதுன்னுதான் இதுவரை முடிவுபண்ணியிருக்கேன்....

பா.ராஜாராம் said...

நல்ல பதிவு,சுவராசியமான பாட்டு சொருகல்.கலக்குறீங்க பாலாஜி!

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO