க.பாலாசி: பாவக்கா கொழம்பு...

Saturday, October 24, 2009

பாவக்கா கொழம்பு...


‘நண்பா...டெய்லியும் சாம்பார மட்டுமே சாப்பிட்டு அலுத்துப்போச்சு...‘

‘ஆமாம் நண்பா...காலையில பாவக்கா (பாகற்காய்) கொழம்பு வைப்போம்.’


••••

காலை 6 மணி...


‘என்னன்ன வேணும்...நான் மார்க்கெட்டுக்கு போயிட்டு வர்ரேன்’

‘பாவக்கா, வெங்காயம், தக்காளி, தேங்கா, கருவேப்பிள்ள, கொத்தமல்லி...’

‘ம்ம் சரி...நீங்க போயி அரிசி மூணு டம்ளர் ஊறவைங்க.’ நான் போயிட்டு வந்திடுறேன்.’

•••••


மார்க்கெட்


‘ம்ம்...எல்லா எவ்வளங்ணா?’

‘இருபத்தாரு...’

••••••


‘அரிசி ஊறப்பபோட்டுட்டீங்களா நண்பா?’

‘ம்ம்....போட்டாச்சு போட்டாச்சு...’

‘சரி நான் என்ன பண்ணட்டும்’

‘வெங்காயம், பூண்டுல்லாம் உறிச்சிட்டு, அத தக்காளியோட சேத்து வதக்கிட்டு...மொத்தமா போட்டு மிக்ஸியில அடிங்க’

‘டுர்ர்ர்ர்ர்........’

‘முடிஞ்சிடுச்சி....அப்பறம்...’

தேங்காய துருவி அதையும் அரைச்சிடுங்க....’

டுர்ர்ர்ர்..........’

‘ம்ம்ம்...முடிஞ்சிடுச்சு...’

‘எல்லாத்தையும் எங்கிட்ட குடுத்துட்டு நீங்க வேடிக்க மட்டும் பாருங்க...நான் எதாவது சொன்னா... செஞ்சா போதும்...’

’ம்ம்ம்....’

கடுகு’

இந்தாங்க’

எண்ணெ....’

இந்தாங்க

கருவேப்பிள்ள ’

இந்தாங்க’

‘எல்லாத்தையும் குடுத்துகிட்டே இருந்தா எப்படி? நீங்களே வந்து போடுங்க...முதல்ல தாளிச்சிட்டு பெறவு தேங்காய மட்டும் வைச்சிட்டு பாக்கி எல்லாத்தையும் சட்டியில ஊத்தி கொஞ்சம் தண்ணிவிட்டு கொதிக்கவிடுங்க...கடைசியா தேங்காய போட்டு கொஞ்சம் கொதிக்கவிட்டு இறக்கினா போதும்....நான் போயி அரிசிய கழுவிட்டு வரேன்.’

‘ம் சரி நண்பா...’

பட்..பட்...பட்....ப்ச்ச்ச்ச்......ச்சூ.........

‘நண்பா சிம்ல வைங்க...இல்லாட்டி தண்ணி மட்டும்தான் சுண்டும்...காயெல்லாம் வேகாது...’

‘சரி நண்பா....நீங்க பக்கத்து அடுப்புலேயே ரைஸ் குக்கர வைச்சிடுங்க....’


கொழம்பு ரெடி...

‘சரி நாலு விசில் உட்டு ஆஃப் பண்ணிடுங்க. நான் கடைக்கு போயி ஒரு டீ போட்டுட்டு...மணிக்கூண்டு வரைக்கும் போயிட்டு வரேன்.

‘ஓ.கே. மணிக்கூண்டுக்கு எதுக்கு?’

‘ம்ம்ம்...மணி பாக்கத்தான்.’

சரி சரி...பொண்ணுங்க வாட்ச்ல பாத்துடாதிங்க....அப்பறம் திரும்பி வர்ரப்ப ‘........’ இருக்காது. நான் போயி குளிச்சிட்டு வந்து சாப்பிடுறேன்.’

•••••


அனல் மேலே பனித்துளியே.........அலைபாயும்.....(செல்லிடபேசி)’

‘ஹலோ....சொல்லுங்க நண்பா’

சாப்புட்டீங்களா?’

‘ம்ம்...இப்பதான் சாப்பிட்டுகிட்டே இருக்கேன்.‘

‘கொழம்பு எப்படி?‘

‘சூப்பர்ர்ர்ர்.....ஆமா பாவக்காய என்ன பண்ணீங்க?‘

அடப்பாவி....அத கொழம்புல போடலையா?‘

கிழிஞ்சிது. நீங்க போட்டிருப்பீங்கண்ணு நான் விட்டுட்டேன்.‘

‘சரி விடுங்க...பேச்சிலர் சமையல்ல இதெல்லாம் ஜகஜம்....‘

‘தம்பி....?....என்ன சாப்பாடு என்ன கொழம்பு?’ பக்கத்துவீட்டு அக்கா.

அரிசி சாப்பாடும், பாவக்கா கொழம்பும்க்கா...‘

‘பாவக்கா கொழம்பா....ம்ம்...சாப்புடுங்க...சாப்புடுங்க...பாவக்கா உடம்புக்கு நல்லது.‘


‘?????......’


டிஸ்கி : இந்த கொழம்பு நேத்து காலையில வைச்சது. பேச்சிலர்ஸ்லாம் சேர்ந்து சமைச்சு சாப்பிடும்போது இதுமாதிரி நடக்கிறது சாதாரணமப்பா....


தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...

27 comments:

Anonymous said...

பாவக்காய் இல்லாம புளி இல்லாம வித்தியாசமா இருந்துருக்குமே :)

ஈரோடு கதிர் said...

//மார்க்கெட்
‘ம்ம்...எல்லா எவ்வளங்ணா?’

‘இருபத்தாரு...’


••••••
‘அரிசி ஊறப்பபோட்டுட்டீங்களா நண்பா?’

//

என்னப்பா....... அரிசிய மார்க்கெட்லயா ஊறப்போட்டுடீங்களா?

vasu balaji said...

/‘பாவக்கா, வெங்காயம், தக்காளி, தேங்கா, கருவேப்பிள்ள, கொத்தமல்லி...’/

/மார்க்கெட்


‘ம்ம்...எல்லா எவ்வளங்ணா?’

‘இருபத்தாரு...’/

இதெல்லாம் பார்த்தாலே இந்த காசு கேப்பான். வாங்கினா மாதிரி தெரியலயே=)). வெல எப்புடி இருந்தா என்னா. புளியில்லாட்டியும் குழம்பு சூப்பர்

ஈரோடு கதிர் said...

//ஆமா பாவக்காய என்ன பண்ணீங்க?//

அதத்தான்... மேலே படத்துல இருக்கிற சட்டியில போட்டுட்டேனே

தமிழ் அமுதன் said...

///வதக்கிட்டு...மொத்தமா போட்டு மிக்ஸியில அடிங்க’

‘டுர்ர்ர்ர்ர்........’

‘முடிஞ்சிடுச்சி....அப்பறம்...’///


;;)) சூப்பர்...!

வெண்ணிற இரவுகள்....! said...

அரசியல்ல இது எல்லாம் சாதரணம்

velji said...

பாவக்கா இல்லாத பாவக்கா குழம்பா...சூப்பர்!

புலவன் புலிகேசி said...

பாலாஜி....நல்ல சமையல்தான் பாவக்காயை உட்டுடீங்களே. நானும் எண்கள் அறையில் செய்துப் பார்க்கிறேன். எனக்கும் சாம்பார் சாப்பிட்டு போரடிச்சிடுசி..

அன்பேசிவம் said...

நண்பா, நல்லவேளை பாவக்காயை மறந்திங்க, போங்க. எனக்கு பாவக்கான்னாலே உவ்வே....

ஆமா, பாவக்காயும் போடலை?! புளியும் போடலை...... ?!

..................

யோவ்! வெறும் சுடுதண்ணிய ஊத்தி சாப்ட்டுட்டு ரவுச பாரு.....

நாடோடி இலக்கியன் said...

இந்த மாதிரி கூத்து நாங்களும் பண்ணியிருக்கோம்.

ஆனா நாங்க குழம்பை வைத்த பிறகுதான் பேர் வைப்போம்.

சந்தனமுல்லை said...

:))

thiyaa said...

//

‘அனல் மேலே பனித்துளியே.........அலைபாயும்.....(செல்லிடபேசி)’
‘ஹலோ....சொல்லுங்க நண்பா’
‘சாப்புட்டீங்களா?’
‘ம்ம்...இப்பதான் சாப்பிட்டுகிட்டே இருக்கேன்.‘
‘கொழம்பு எப்படி?‘
‘சூப்பர்ர்ர்ர்.....ஆமா பாவக்காய என்ன பண்ணீங்க?‘
‘அடப்பாவி....அத கொழம்புல போடலையா?‘
‘கிழிஞ்சிது. நீங்க போட்டிருப்பீங்கண்ணு நான் விட்டுட்டேன்.‘
‘சரி விடுங்க...பேச்சிலர் சமையல்ல இதெல்லாம் ஜகஜம்....‘
‘தம்பி....?....என்ன சாப்பாடு என்ன கொழம்பு?’ பக்கத்துவீட்டு அக்கா.
‘அரிசி சாப்பாடும், பாவக்கா கொழம்பும்க்கா...‘
‘பாவக்கா கொழம்பா....ம்ம்...சாப்புடுங்க...சாப்புடுங்க...பாவக்கா உடம்புக்கு நல்லது.‘

‘?????......’

டிஸ்கி : இந்த கொழம்பு நேத்து காலையில வைச்சது. பேச்சிலர்ஸ்லாம் சேர்ந்து சமைச்சு
//

கொழம்பு கசக்குது ஆனால் அசத்தலாக எழுதினீர்களே அத்தான் தூக்குது

பிரபாகர் said...

நல்லவேளை, அடுப்ப பத்த வெச்சீங்க... சில பேச்சிலர் சமையல்ல அது இல்லாம நிறைய நடக்கும்.

நல்லருக்கு பாலாசி...

பிரபாகர்.

kanagu said...

ஹா ஹா ஹா.... ரொம்ப நல்லா இருந்துதுங்க... :)

Jerry Eshananda said...

"sumptuous recipe".

ஹேமா said...

பாலாஜி,சிரிச்சு முடில.
புளி வேணுமே பாவக்காய்க்கு.
இல்லாட்டி கசக்குமே !
இப்பிடித்தானா சமையல் நடக்குது !

அறிவிலி said...

மணிக்கூண்டு போற நெனப்புலயே சமைச்சா இப்புடித்தான்..

சந்தான சங்கர் said...

பக்காவா பிளான்
பண்ணி
பாவக்காய விட்டுட்டீங்களே!
பாவம் அக்கா
விசாரிச்சிட்டு
கேட்காம போய்ட்டாங்க..

அன்புடன் மலிக்கா said...

பாலாஜி பாகற்காய் இல்லாமல் பாகற்காய் குழம்பு சூப்பர்,

இப்படியே போன அரிசியே இல்லாம சாதம் வடிக்கலாமுங்க..

மேவி... said...

:))


follower agitten thala

க.பாலாசி said...

//சின்ன அம்மிணி said...
பாவக்காய் இல்லாம புளி இல்லாம வித்தியாசமா இருந்துருக்குமே :)//

கண்டுபிடிச்சிட்டீங்களா? அவ்வ்வ்வ்....

நன்றி வருகைக்கு...

//Blogger கதிர் - ஈரோடு said...
என்னப்பா....... அரிசிய மார்க்கெட்லயா ஊறப்போட்டுடீங்களா?//

நீங்க மார்க்கெட்டுக்கு கீழ உள்ள கோட்டை பார்க்கலயா? சரி விடுங்க....

நன்றி வருகைக்கு...

//Blogger வானம்பாடிகள் said...
இதெல்லாம் பார்த்தாலே இந்த காசு கேப்பான். வாங்கினா மாதிரி தெரியலயே=)). வெல எப்புடி இருந்தா என்னா. புளியில்லாட்டியும் குழம்பு சூப்பர்//

நன்றி நீங்களாவது நல்லாருக்குன்னு சொன்னீங்களே...

/‘பாவக்கா, வெங்காயம், தக்காளி, தேங்கா, கருவேப்பிள்ள, கொத்தமல்லி...’/

/மார்க்கெட்


‘ம்ம்...எல்லா எவ்வளங்ணா?’

‘இருபத்தாரு...’/

இதெல்லாம் பார்த்தாலே இந்த காசு கேப்பான். வாங்கினா மாதிரி தெரியலயே=)). வெல எப்புடி இருந்தா என்னா. புளியில்லாட்டியும் குழம்பு சூப்பர்

//Blogger கதிர் - ஈரோடு said...
அதத்தான்... மேலே படத்துல இருக்கிற சட்டியில போட்டுட்டேனே//

அட ஆமால்ல....நன்றி

க.பாலாசி said...

//Blogger ஜீவன் said...
///வதக்கிட்டு...மொத்தமா போட்டு மிக்ஸியில அடிங்க’
‘டுர்ர்ர்ர்ர்........’
‘முடிஞ்சிடுச்சி....அப்பறம்...’///
;;)) சூப்பர்...!//

நன்றி அன்பரே...

//Blogger வெண்ணிற இரவுகள்....! aid...
அரசியல்ல இது எல்லாம் சாதரணம்//

ஹா..ஹா....அதானே....நன்றி நண்பா...

//Blogger velji said...
பாவக்கா இல்லாத பாவக்கா குழம்பா...சூப்பர்!///

அந்த கொடுமைய ஏன் கேட்கறீங்க...நன்றி அன்பரே...

//Blogger புலவன் புலிகேசி said...
பாலாஜி....நல்ல சமையல்தான் பாவக்காயை உட்டுடீங்களே. நானும் எண்கள் அறையில் செய்துப் பார்க்கிறேன். எனக்கும் சாம்பார் சாப்பிட்டு போரடிச்சிடுசி..//

அடப்பாவி...நீங்களும் செய்யப்போறீங்களா? ம்ம்ம்...பாவக்காய மறந்திடாதிங்க...

க.பாலாசி said...

//முரளிகுமார் பத்மநாபன் said...
நண்பா, நல்லவேளை பாவக்காயை மறந்திங்க, போங்க. எனக்கு பாவக்கான்னாலே உவ்வே....//

அதனாலத்தான் போடலை நண்பா...

// ஆமா, பாவக்காயும் போடலை?! புளியும் போடலை...... ?!//
யோவ்! வெறும் சுடுதண்ணிய ஊத்தி சாப்ட்டுட்டு ரவுச பாரு.....///

அண்ணே உண்மையை வெளியில சொல்லாதிங்கண்ணே....

//Blogger நாடோடி இலக்கியன் said...
இந்த மாதிரி கூத்து நாங்களும் பண்ணியிருக்கோம்.
ஆனா நாங்க குழம்பை வைத்த பிறகுதான் பேர் வைப்போம்.//

அப்படியா? ஆனா கடைசிவரை என்ன கொழம்பு வச்சோம்னே தெரியாமலே சாப்பிட்டிருக்கோம்.

நன்றி அண்ணா...

//Blogger சந்தனமுல்லை said...
:))//

நன்றி அக்கா....

க.பாலாசி said...

// தியாவின் பேனா said...
கொழம்பு கசக்குது ஆனால் அசத்தலாக எழுதினீர்களே அத்தான் தூக்குது//

மிக்க நன்றி....தியா...

//Blogger பிரபாகர் said...
நல்லவேளை, அடுப்ப பத்த வெச்சீங்க... சில பேச்சிலர் சமையல்ல அது இல்லாம நிறைய நடக்கும்.//

ஹா..ஹா...இப்படியும் சிலநேரங்கள்ல நடக்கிறது. நன்றி அன்பரே...

//Blogger kanagu said...
ஹா ஹா ஹா.... ரொம்ப நல்லா இருந்துதுங்க... :)//

நன்றி....கனகு...

க.பாலாசி said...

//ஜெரி ஈசானந்தா. said...
"sumptuous recipe".//

நன்றி ஜெரி வருகைக்கு...

//Blogger ஹேமா said...
பாலாஜி,சிரிச்சு முடில.
புளி வேணுமே பாவக்காய்க்கு.
இல்லாட்டி கசக்குமே !
இப்பிடித்தானா சமையல் நடக்குது !//

அட ஆமாக்கா...அத ஏன் கேட்கறீங்க...

நன்றி ஹேமா வருகைக்கு...

//Blogger அறிவிலி said...
மணிக்கூண்டு போற நெனப்புலயே சமைச்சா இப்புடித்தான்..//

அவ்வ்வ்வ்வ்....நன்றி...

//Blogger சந்தான சங்கர் said...
பக்காவா பிளான்
பண்ணி
பாவக்காய விட்டுட்டீங்களே!
பாவம் அக்கா
விசாரிச்சிட்டு
கேட்காம போய்ட்டாங்க..//

ஆமா...ஆமா....

நன்றி சந்தான சங்கர்...

க.பாலாசி said...

//Blogger அன்புடன் மலிக்கா said...
பாலாஜி பாகற்காய் இல்லாமல் பாகற்காய் குழம்பு சூப்பர்,
இப்படியே போன அரிசியே இல்லாம சாதம் வடிக்கலாமுங்க..//

அட ஆமாங்க...நல்ல ஐடியா...

நன்றி வருகைக்கு..

//Blogger டம்பி மேவீ said...
:))//

நன்றி டம்பு மேவீ...

// follower agitten thala//

மிக்க நன்றி...

ஆரூரன் விசுவநாதன் said...

இயல்பாய் சமைக்கச் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள் பாலாஜி....


மிக அருமையான முயற்சி.....


வாழ்த்துக்கள்

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO