க.பாலாசி: நன் கடவுள்...

Thursday, December 10, 2009

நன் கடவுள்...

திருப்பதி சென்றிருந்தபோது பாதசாரிகள் பாதையின் படிக்கட்டுகளில் ஒரு 8 வயது மதிக்கத்தக்க சிறுமியொருத்தி யாசகம் கேட்டு தவழ்ந்து வந்துகொண்டிருந்தாள். கால் இரண்டும் ஊனமாக இருக்கவேண்டும். படிகளில் ஏறிச்சென்ற எங்களுக்கும், இறங்கி (தவழ்ந்து) வந்த அவளுக்கும் களைப்பு ஒரே நேரத்தில் ஏற்பட, ஓரங்களில் இருந்த சுவற்றில் நாங்கள் அமர்ந்தோம். அவளுக்கான கொஞ்ச அனுதாபமும் என் வியர்வையினூடே கசிந்துகொண்டுதானிருந்தது. அவளும் எங்களுக்கெதிரிரே அமர்ந்து அதுவரை கிடைத்த காசுகளை எண்ணிக்கொண்டிருந்தாள். எங்கள் களைப்பு அடங்க இன்னும் சிறுது நேரம் தேவைப்பட்டமையால் அமர்ந்த இடம் சூடேறி தணியும் வரை தரிசனம் பெறச்செல்லும் சில நிறங்களை தரிசித்துக்கொண்டிருந்தோம்.

ஒரு பத்து நிமிடங்கள் கழித்து அதுவரை தவழ்ந்து வந்துகொண்டிருந்த பெண் எழுந்து நடக்க ஆரம்பித்தாள். இதென்ன? ஏழுமலையான் அதற்குள்ளாக கண்திறந்துவிட்டார் என்று நானும் நண்பரும் திகைத்து நின்ற தருவாயில் கொஞ்ச தூரம் கீழிரங்கி சென்ற அவள், அவளையே நோட்டமிட்டிருந்த ஒருவனிடம் தன்னிடமிருந்த சில்லரை முடிச்சொன்றை கொடுத்துவிட்டு மறுபடியும் தவழ ஆரம்பித்துவிட்டாள். (பால்ய வயது பழக்கம்)

என்னவென்று சொல்வது? ஒருவேளை அது அவளின் தந்தையாக இருக்குமோ? என்ற சந்தேகம் இருந்தது. அவனுக்கேன் இந்த பிழைப்பு? இப்படி சம்பாதிப்பதை வைத்து சோம்பேறியான அவன் என்ன செய்யமுடியும்? அவன் ஒரு குடிகாரனாக இருப்பானோ? சந்தேகம் வலுவாகத்தான் இருந்தது. இதென்ன இந்த சமுதாயத்தின் சாபமா? எது எப்படியோ நமக்கு குழுமியிருக்கும் கூட்டங்களுக்கு நடுவே சுவாமிசி, நெரிசலில்லாமல் காட்சிதந்தால் சரிதான் என்றவாறு ஏறத்தொடங்கின எங்களது கால்கள்.

சரியாக ஆறுமாதங்கள் கழித்து இந்த நினைவு வந்ததற்கு காரணமும் இருக்கிறது. இரண்டு நாட்கள் முன்புதான் நான் கடவுள் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. சில நண்ப புண்ணியகோடிகளின் அருளால். அதில் காட்டப்பட்ட பிச்சைக்காரர்களின் மறுவுலகம் இந்த ஞாபகத்தினை தோண்டி பரிசோதனை செய்திருக்கவேண்டும். இப்போது நினைத்துப்பார்க்கிறேன், ஒருவேளை அவளிடமிருந்து சில்லறை முடிச்சியினை பெற்றவன் இந்த படத்தில் வரும் தாண்டவனின் அடிபொடிகள் போல இருப்பானோ என்று (இருக்கலாம்). எது எப்படியோ நான் கண்ட இந்த காட்சி நான் கடவுள் பார்ப்பதற்கு முன்பாக நான் கடவுளை பார்க்கப்போனதால். வாழ்க நன் கடவுள்.

அவ்விடத்தே கடந்து சென்ற எத்தனையோ பெரிய மனிதர்கள், செல்வந்தர்கள் அவளையோ அவள் சார்ந்த தொழிலையோ, அவளுக்குள்ள பிரச்சனைகளையோ அல்லது வலியையோ ஒரு பொருட்டாக மதித்ததாக தெரியவில்லை. நான் கவனித்த அளவிற்குகூட(????). தம்மால் முடிந்த ஒரு ரூபாய் நாணயத்தையோ அல்லது அதற்கும் குறைவான எடையுள்ளதையோ மட்டுமே புண்ணியம்பெறும் நோக்கில் கொடுத்துவிட்டு கடமையே கருத்தாக சென்றனர். (நான் அதுகூட செய்யவில்லை) நானும் அதே பாதையை கடந்து வந்துவிட்டேன். (குற்றவுணர்ச்சி இந்த இடுகையை எழுதும்வரை எனக்குமில்லை. குற்றமா?)

சிலநேரங்களில் எனது மனவோட்டத்தினை மறுவாய்வு செய்துபார்க்கையில் இதுபோல எத்தனை பாதைகளை கடந்து வந்திருக்கிறேன் என்ற உணர்வு எழத்தான் செய்கிறது. இன்னும் சொல்லப்போனால் இன்னொரு மனிதனின் வலிகளைத்தான் எவ்வளவு சுலபமாக, நம் மனதிற்குள் மருந்து தடவி மறைத்துக்கொள்கிறோம்.30 comments:

ஈரோடு கதிர் said...

//தரிசனம் பெறச்செல்லும் சில நிறங்களை தரிசித்துக் கொண்டிருந்தோம்.//

சைட் அடிச்சதை என்ன்ன்ன்னா... டெக்னிக் சொல்றாங்க பாருங்கப்பா

ஈரோடு கதிர் said...

//இன்னொரு மனிதனின் வலிகளைத்தான் எவ்வளவு சுலபமாக, நம் மனதிற்குள் மருந்து தடவி மறைத்துக்கொள்கிறோம்.//

மறைத்துக்கொள்வதில்லை...

மறந்து போகிறோம் அவ்வளவே

Ashok D said...

//சைட் அடிச்சதை என்ன்ன்ன்னா... டெக்னிக் சொல்றாங்க பாருங்கப்பா//
:)))))

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
மறைத்துக்கொள்வதில்லை...
மறந்து போகிறோம் அவ்வளவே//

மிகச்சரி...

ராமலக்ஷ்மி said...

//சிலநேரங்களில் எனது மனவோட்டத்தினை மறுவாய்வு செய்துபார்க்கையில் இதுபோல எத்தனை பாதைகளை கடந்து வந்திருக்கிறேன் என்ற உணர்வு எழத்தான் செய்கிறது.//

மறு ஆய்வு பலநேரங்களில் நம் மனமாற்றங்களுக்கும் வழி வகுக்கிறது. நல்ல பதிவு.

மகா said...

//அதுவரை தவழ்ந்து வந்துகொண்டிருந்த பெண் எழுந்து நடக்க ஆரம்பித்தாள்//

திருப்தி போன்ற இடங்களில் வெகு சாதரணமாக நடக்கிறது பாலாசி

ரோஸ்விக் said...

நண்பா இது மாதிரி, பல சுரண்டல்கள் நமக்கு முன் நடந்துகொண்டிருக்கிறது... இப்பொழுதெல்லாம் நம் மேல் திணிக்கப்படும் சில சுரண்டல்களை கூட நாம் மற(ந்)த்துவிட்டு வாழ்கிறோம் என நினைக்கிறேன்.

அன்புடன் நான் said...

உங்க கண்ணோட்டம் அருமை....

//தரிசனம் பெறச்செல்லும் சில நிறங்களை தரிசித்துக் கொண்டிருந்தோம்.//


(உங்க நேர்மையை பாராட்டுகிறேன் பாலாசி)

அன்பேசிவம் said...

இதிலென்ன குற்றம் இருந்துவிடப் போகிறது? உங்களால் ஒரு பெண், ஒரு குழந்தை நேரடியாகவோ, இல்லை மறைமுகமாகவோ, இந்த சூழ் நிலைக்கு தள்ளப்படாதவரை, இதில் என்ன குற்றம் இருந்துவிடப் போகிறது?

இப்படி மறுவாய்வு செய்யும்வரையாவது மழை பெய்யட்டும்.

வாழ்த்துக்கள்.

அன்பேசிவம் said...

இதிலென்ன குற்றம் இருந்துவிடப் போகிறது? உங்களால் ஒரு பெண், ஒரு குழந்தை நேரடியாகவோ, இல்லை மறைமுகமாகவோ, இந்த சூழ் நிலைக்கு தள்ளப்படாதவரை, இதில் என்ன குற்றம் இருந்துவிடப் போகிறது?

இப்படி மறுவாய்வு செய்யும்வரையாவது மழை பெய்யட்டும்.

வாழ்த்துக்கள்.

சத்ரியன் said...

//சொல்லப்போனால் இன்னொரு மனிதனின் வலிகளைத்தான் எவ்வளவு சுலபமாக, நம் மனதிற்குள் மருந்து தடவி மறைத்துக்கொள்கிறோம்.//

பாலாசி,

நிஜம்..!

ஆரூரன் விசுவநாதன் said...

மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் பாலாசி......

வாழ்த்துக்கள்

புலவன் புலிகேசி said...

//ஒரு ரூபாய் நாணயத்தையோ அல்லது அதற்கும் குறைவான எடையுள்ளதையோ மட்டுமே புண்ணியம்பெறும் நோக்கில் கொடுத்துவிட்டு கடமையே கருத்தாக சென்றனர். (நான் அதுகூட செய்யவில்லை) நானும் அதே பாதையை கடந்து வந்துவிட்டேன். (குற்றவுணர்ச்சி இந்த இடுகையை எழுதும்வரை எனக்குமில்லை. குற்றமா?)//

இதில் குற்றமேதுமில்லை தல. எனக்கு பிச்சையிடுவது பிடிக்காது. அப்படி நீங்களும் 1ரூ போட்டிருந்தால் அதுதான் குற்றம்...என்ன செய்வது நம் அரசு பிச்சையை ஒழிக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை..

கார்த்திகைப் பாண்டியன் said...

self analysis.. good..:-)))

சீமான்கனி said...

//தம்மால் முடிந்த ஒரு ரூபாய் நாணயத்தையோ அல்லது அதற்கும் குறைவான எடையுள்ளதையோ மட்டுமே புண்ணியம்பெறும் நோக்கில் கொடுத்துவிட்டு கடமையே கருத்தாக சென்றனர்.//

உண்மைதான் நம்மில் பல பேர் இப்படி பல நிகழ்வுகளை சாதரணமாய் கடப்பது சகஜமாகி போச்சு...
நல்ல பகிர்வு...பாலாசி......

கலகலப்ரியா said...

//குற்றவுணர்ச்சி இந்த இடுகையை எழுதும்வரை எனக்குமில்லை. குற்றமா?//

மெய்ப்பொருள் காண்பதறிவு...! உங்க கூட நீங்களே பேசித் தீர்க்க வேண்டியது..! நல்ல பதிவு..!

vasu balaji said...

நல்ல சுய ஆய்வு.கதிரோட முதல் பின்னூட்டத்துக்கு பதிலைக் காணோம்?

ஹேமா said...

கடவுளுக்கு முன்னுக்கே இப்பிடியும் நடக்குதா !

தாராபுரத்தான் said...

கடவுளை பார்க்கப்போனதால்கடவுளை பார்க்கப்போனதால்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல பதிவு ,இது போன்றவர்களை எல்லாக் கோவில்களிலும் பார்க்க முடியும்.

Romeoboy said...

\\ஒரு பத்து நிமிடங்கள் கழித்து அதுவரை தவழ்ந்து வந்துகொண்டிருந்த பெண் எழுந்து நடக்க ஆரம்பித்தாள்//

இது எல்லாம் சாதாரணம் பாஸ் . குஷ்டம் வந்தவன் போல நடிக்கிற எத்தனயோ பேர நான் பார்த்து இருக்குறேன் .

பூங்குன்றன்.வே said...

நல்ல கட்டுரையும், அலசலும்... வாழ்த்துக்கள் பாலாசி !!!

Prabu M said...

//இன்னும் சொல்லப்போனால் இன்னொரு மனிதனின் வலிகளைத்தான் எவ்வளவு சுலபமாக, நம் மனதிற்குள் மருந்து தடவி மறைத்துக்கொள்கிறோம்//

இதே உணர்வைத்தான் " நான் கடவுள்" பார்த்தபின் நானும் உணர்ந்தேன்.. அதாவது அந்தப் படம் பார்த்தபின் தான் பிச்சைக்காரர்களின் மறுபக்கம் புரிந்தது... வலித்தது...

சிலகாலம் முன்பு அப்படத்தின் தாக்கங்களை எழுதியிருந்தேன் என் பதிவில்... அநேகமாக நம் கருத்துக்கள் ஒத்துப் போகலாம்... நேரமிருந்தால் ஒரு பார்வை பார்க்கவும்... :)

http://vasagarthevai.blogspot.com/2009/04/blog-post_29.html

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
சைட் அடிச்சதை என்ன்ன்ன்னா... டெக்னிக் சொல்றாங்க பாருங்கப்பா//

ஸ்ஸ்....இவ்வளவு சத்தமாவா சொல்றது....

//Blogger ஈரோடு கதிர் said...
மறைத்துக்கொள்வதில்லை...
மறந்து போகிறோம் அவ்வளவே//

சரிதான் நன்றி அய்யா...

//Blogger D.R.Ashok said...
:)))))//

நன்றி அசோக் சார்...

க.பாலாசி said...

// ராமலக்ஷ்மி said...
மறு ஆய்வு பலநேரங்களில் நம் மனமாற்றங்களுக்கும் வழி வகுக்கிறது. நல்ல பதிவு.///

நன்றி அக்கா..

//Blogger மகா said...
திருப்தி போன்ற இடங்களில் வெகு சாதரணமாக நடக்கிறது பாலாசி//

ம்ம்ம்....நன்றி கருத்திற்கும் வருகைக்கும்..

//Blogger ரோஸ்விக் said...
நண்பா இது மாதிரி, பல சுரண்டல்கள் நமக்கு முன் நடந்துகொண்டிருக்கிறது... இப்பொழுதெல்லாம் நம் மேல் திணிக்கப்படும் சில சுரண்டல்களை கூட நாம் மற(ந்)த்துவிட்டு வாழ்கிறோம் என நினைக்கிறேன்.//

சரிதான்....நன்றி அன்பரே வருகைக்கும் கருத்திற்கும்...

//Blogger சி. கருணாகரசு said...
உங்க கண்ணோட்டம் அருமை....உங்க நேர்மையை பாராட்டுகிறேன் பாலாசி)//

நன்றி அய்யா...

க.பாலாசி said...

//முரளிகுமார் பத்மநாபன் said...
இதிலென்ன குற்றம் இருந்துவிடப் போகிறது? உங்களால் ஒரு பெண், ஒரு குழந்தை நேரடியாகவோ, இல்லை மறைமுகமாகவோ, இந்த சூழ் நிலைக்கு தள்ளப்படாதவரை, இதில் என்ன குற்றம் இருந்துவிடப் போகிறது?
இப்படி மறுவாய்வு செய்யும்வரையாவது மழை பெய்யட்டும். வாழ்த்துக்கள்.//

நன்றி நண்பரே....

//Blogger சத்ரியன் said...
பாலாசி,
நிஜம்..!//

வாங்க சத்ரியன்...நன்றி...

//Blogger ஆரூரன் விசுவநாதன் said...
மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் பாலாசி...... வாழ்த்துக்கள்//

நன்றி...அய்யா...

//Blogger புலவன் புலிகேசி said...
இதில் குற்றமேதுமில்லை தல. எனக்கு பிச்சையிடுவது பிடிக்காது. அப்படி நீங்களும் 1ரூ போட்டிருந்தால் அதுதான் குற்றம்...என்ன செய்வது நம் அரசு பிச்சையை ஒழிக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை..//

ம்ம்ம்..சரிதான்...நன்றி நண்பா...

க.பாலாசி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
self analysis.. good..:-)))//

நன்றிங்க தலைவா..

//Blogger seemangani said...
உண்மைதான் நம்மில் பல பேர் இப்படி பல நிகழ்வுகளை சாதரணமாய் கடப்பது சகஜமாகி போச்சு... நல்ல பகிர்வு...பாலாசி......//

நன்றி நண்பா...

//Blogger கலகலப்ரியா said...
மெய்ப்பொருள் காண்பதறிவு...! உங்க கூட நீங்களே பேசித் தீர்க்க வேண்டியது..! நல்ல பதிவு..!//

நன்றி கலா....

//Blogger வானம்பாடிகள் said...
நல்ல சுய ஆய்வு.கதிரோட முதல் பின்னூட்டத்துக்கு பதிலைக் காணோம்?//

நாம பேசி தீர்த்துக்கலாம்...நன்றி..

//Blogger ஹேமா said...
கடவுளுக்கு முன்னுக்கே இப்பிடியும் நடக்குதா !//

அந்த கொடுமை உங்களுக்கு தெரியாதா....நன்றி ஹேமா..

க.பாலாசி said...

//அப்பன் said...
கடவுளை பார்க்கப்போனதால்கடவுளை பார்க்கப்போனதால்//

நன்றி அய்யா வருகைக்கு...

//Blogger தியாவின் பேனா said...
வாழ்த்துகள்//

நன்றி...

//Blogger ஸ்ரீ said...
நல்ல பதிவு ,இது போன்றவர்களை எல்லாக் கோவில்களிலும் பார்க்க முடியும்.//

சரிதான்...நன்றி அண்ணா...

//Blogger Romeoboy said...
இது எல்லாம் சாதாரணம் பாஸ் . குஷ்டம் வந்தவன் போல நடிக்கிற எத்தனயோ பேர நான் பார்த்து இருக்குறேன் .//

அப்படியா...நன்றி நண்பரே...

//Blogger பூங்குன்றன்.வே said...
நல்ல கட்டுரையும், அலசலும்... வாழ்த்துக்கள் பாலாசி !!!//

நன்றி நண்பரே...

//Blogger பிரபு . எம் said...
இதே உணர்வைத்தான் " நான் கடவுள்" பார்த்தபின் நானும் உணர்ந்தேன்.. அதாவது அந்தப் படம் பார்த்தபின் தான் பிச்சைக்காரர்களின் மறுபக்கம் புரிந்தது... வலித்தது...
சிலகாலம் முன்பு அப்படத்தின் தாக்கங்களை எழுதியிருந்தேன் என் பதிவில்... அநேகமாக நம் கருத்துக்கள் ஒத்துப் போகலாம்... நேரமிருந்தால் ஒரு பார்வை பார்க்கவும்... :)
http://vasagarthevai.blogspot.com/2009/04/blog-post_29.html //

நன்றி முதல் வருகைக்கும் கருத்திற்கும்...பார்க்கிறேன்....

CS. Mohan Kumar said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. நியாயமான எழுத்து

க.பாலாசி said...

//Mohan Kumar said...
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. நியாயமான எழுத்து//

நன்றி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்....

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO