க.பாலாசி: கதம்பம்...

Monday, August 31, 2009

கதம்பம்...

இளமைவிகடன் குட் பிளாக்கில் இந்த பதிவு...பள்ளியில் படித்த வரலாற்று பாடங்கள்...
பாதி பாதி ஞாபகம்...
சென்று பார்க்கையில் சிதிலமடைந்த செங்கற்கள்,
பாதுகாப்பு பணியில் சில வௌவால்கள் மட்டும்...

*******

பாக்கெட் பால் விலைவுயர்வு....
கலங்கும் கணவான்கள்...
தாய்ப்பாலின்
முக்கியத்துவம் உணரும் தாய்மார்கள்...

*******

அலைந்து திரிந்து கடன்வாங்கி,
வரதட்சணை கொடுத்த
கணவனைப் பற்றி கவலையில்லை...
பெண்ணின் பிரசவம் எண்ணி துயருரும் மனைவிக்கு...

*******

நகைகள், இரு சக்கர வாகனம், சீர்வரிசைகள்...
எதுவும் உணர்த்தவில்லை...
முதலிரவில் மனைவியின்
தாலி மட்டும் குத்துகிறது...

******

4 லட்சம் பட்டதாரிகள்
4000 ரூபாய் சம்பளத்திற்கு காத்திருக்கும் வேளை...

போராட்டத்தில் பொழுதை போக்குபவர்களுக்கு...
15 ஆயிரம் +++ போதவில்லையாம்...

*******

மழைவேண்டி ஊரே வேண்டுகிறது...
வருண பகவான் கண் திறந்தார்...மழை, வெள்ளம்...
காக்காய், குருவி கூட உயிருடன் இல்லை...
மறுபடியும் பள்ளிகொண்டார் பகவான்...

*******

தலைவரின் பிறந்தநாளில்
ன்னதான திட்டமாம்...அதற்கு
அயராது உழைக்கும் தொண்டன்...
பட்டினியில் பிள்ளை குட்டிகள்...

*******

பத்து சதவீத வட்டிக்கு வாங்கிய கடன்
தினமும் துரத்தும் தவணைக்காரன்...
நான் சொல்லும் பதில்...
‘அடுத்த எலக்ஸன் வரட்டும்...’

**********தமிழ்மணத்திலும், தமிலிஸ்லிலும் உங்கள் ஓட்டினை பதிவிடவும்...

33 comments:

ஈரோடு கதிர் said...

//முதலிரவில் மனைவியின்
தாலி மட்டும் குத்துகிறது...//

ம்ம்ம்ம்... காறி உமிழும் வரி

//‘அடுத்த எலக்ஸன் வரட்டும்...//

தேர்தல் இனி பணம் காய்க்கும் மரம் தான்

முதல் கவிதை தவிர்த்து எல்லா கவிதையில் ஏதோ ஒரு கோபம் தெரிகிறது

Ashok D said...

கதம்பச் சுவை இனிது.

குடந்தை அன்புமணி said...

நாட்டு நடப்புகள் கதம்பமாய்...

பழமைபேசி said...

அப்படிப்போடுங்க.... பவானி ஆறாப் பாயுதே... வாழ்த்துகள்!

நாடோடி இலக்கியன் said...

எலக்‌ஷன் நச் வரிகள்.


//பவானி ஆறாப் பாயுதே... //

காவிரி ஆறாப் பாயுதே.. :)

வாழ்த்துகள்!

தேவன் மாயம் said...

நான் சொல்லும் பதில்...
‘அடுத்த எலக்ஸன் வரட்டும்.///

வரட்டும் ... வரட்டும். படிதாயிற்று...!!

சீமான்கனி said...

கதம்பம் அருமையா இருக்கு நண்பா....
சமுதயாதின்மேல் இருக்கும் கோபத்தின்..வாசனை வருகிறது
பாராட்டுகள்

க. தங்கமணி பிரபு said...

தூள் கிளப்பல் பாலாஜி!

வால்பையன் said...

//நகைகள், இரு சக்கர வாகனம், சீர்வரிசைகள்...
எதுவும் உணர்த்தவில்லை...
முதலிரவில் மனைவியின்
தாலி மட்டும் குத்துகிறது.//


எவ்ளோ பெரிய மேட்டர் இது!

அது சரி(18185106603874041862) said...

//
மழைவேண்டி ஊரே வேண்டுகிறது...
வருண பகவான் கண் திறந்தார்...மழை, வெள்ளம்...
காக்காய், குருவி கூட உயிருடன் இல்லை...
மறுபடியும் பள்ளிகொண்டார் பகவான்...
//

மறுபடியும் பள்ளிகொண்டார் பகவான்...

:0))

நல்லா இருக்குங்க பாலாஜி!

ப்ரியமுடன் வசந்த் said...

//நகைகள், இரு சக்கர வாகனம், சீர்வரிசைகள்...
எதுவும் உணர்த்தவில்லை...
முதலிரவில் மனைவியின்
தாலி மட்டும் குத்துகிறது...//

நறுக்

எல்லாகவிதைகளும் உணர்ச்சிகரமா இருக்கு பாலாஜி தொடர்ந்து இதுமாதிரி எழுத வாழ்த்துக்கள்

Admin said...

//தலைவரின் பிறந்தநாளில்
அன்னதான திட்டமாம்...அதற்கு
அயராது உழைக்கும் தொண்டன்...
பட்டினியில் பிள்ளை குட்டிகள்...//


அசத்தல்....அத்தனையும் அருமை

பழமைபேசி said...

//சொல்லும் அளவிற்கு அறியப்படவில்லை. //

இனி இதை மாத்திடுங்க என்ன? அதான், ’நச்’ கவி பாலாஜின்னு அறியப்படுகிறவர் ஆயிட்டீங்களே??

ஹேமா said...

அத்தனையும் நல்லா இருக்கு.

//பள்ளியில் படித்த வரலாற்று பாடங்கள்...
பாதி பாதி ஞாபகம்...
சென்று பார்க்கையில் சிதிலமடைந்த செங்கற்கள்,
பாதுகாப்பு பணியில் சில வௌவால்கள் மட்டும்...//

பாலாஜி,இந்த வரிகள் நிறையப் பிடிச்சிருக்கு.தொடருங்கள்.

Anonymous said...

//அலைந்து திரிந்து கடன்வாங்கி,
வரதட்சணை கொடுத்த
கணவனைப் பற்றி கவலையில்லை...
பெண்ணின் பிரசவம் எண்ணி துயருரும் மனைவிக்கு...//

தன்னிடம் வாங்கினதைத்தான் மகளுக்கு தந்தார் என்ற நினைப்பும் காரணமாய் இருக்கலாம்.

அத்தனை கவிதைகளும் அசத்தல்

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள் பாலாஜி

இளமை விகடனின் குட் பிலாக் பகுதியில் "கதம்பம்"

வாழ்த்துகள்
மகிழ்ச்சி

ஆரூரன் விசுவநாதன் said...

கலக்கறீங்க பாலாஜி.....
கல்யாணத்துக்கு முன்னயே இப்படி அனுபவிச்சு எழுதறீங்க.....ம்ம்ம் இன்னும் கல்யாணம் ஆனப்பறம் எப்படில்லாம் எழுதுவீங்க.......

வாழ்த்துக்கள்

Sadagopal Muralidharan said...

சமூகத்தின் மீது உங்கள் கோபப்பார்வை மிக அழுத்தமாக விழுந்திருக்கிறது.
நல்ல சிந்தனையும் அதைச்சார்ந்த கவிதையும் மனதை காயப்படுத்தியது உண்மை.
தொடர்க உங்கள் பணி. இது ஒரு நல்ல பாணி.
இவையெல்லாம் சொல்லும் நாம் நமது சமூகத்திற்காக என்ன செய்திருக்கிறோம் என்று யோசிக்கவேண்டும். ஏதாவது செய்ய முயற்சிக்கவேண்டும். அப்போது தான் நாம் எழுதும் எழுத்துக்கும், மனது ஏங்கும் ஏக்கத்திற்கும் ஒரு சரியான தீர்வாக (அது சிறிதாக இருந்தாலும்) அமையும்.
நீங்கள் எதுவும் செய்யவில்லை, செய்ய முயற்சிக்கவில்லை, செய்து கொண்டிருக்கவில்லை என்று நான் செல்வதாக தயவு செய்து நினைக்க வேண்டாம். இவை அனைவருக்குமாக பகிர்ந்த வார்த்தைகள்.

க.பாலாசி said...

//கதிர் - ஈரோடு said...
ம்ம்ம்ம்... காறி உமிழும் வரி//

ஆமாம்...

//தேர்தல் இனி பணம் காய்க்கும் மரம் தான்// முதல் கவிதை தவிர்த்து எல்லா கவிதையில் ஏதோ ஒரு கோபம் தெரிகிறது//

கோபம் என்பதைவிட என் மனப்புழுக்கம் என்று சொல்வது சரியாக இருக்கும்...

//Blogger D.R.Ashok said...
கதம்பச் சுவை இனிது.//

மிக்க நன்றி அன்பரே..

//Blogger குடந்தை அன்புமணி said...
நாட்டு நடப்புகள் கதம்பமாய்...//

நன்றி அன்பரே...

//Blogger பழமைபேசி said...
அப்படிப்போடுங்க.... பவானி ஆறாப் பாயுதே... வாழ்த்துகள்!//

கொஞ்சம் கற்பனை வறட்சியும் கலந்து...

நன்றி தங்களின் முதல் வருகை மற்றும் கருத்திற்கு....

க.பாலாசி said...

//நாடோடி இலக்கியன் said...
எலக்‌ஷன் நச் வரிகள்.//

நன்றி இலக்கிய அன்பரே...

//பவானி ஆறாப் பாயுதே... //
காவிரி ஆறாப் பாயுதே.. :)
வாழ்த்துகள்!//

மிக்க நன்றி..உங்களின் வாழ்த்துதலுக்கு..

-----------

//Blogger தேவன் மாயம் said...
வரட்டும் ... வரட்டும். படிதாயிற்று...!!//

நன்றி அன்பரே..

-----------

//Blogger seemangani said...
கதம்பம் அருமையா இருக்கு நண்பா....
சமுதயாதின்மேல் இருக்கும் கோபத்தின்..வாசனை வருகிறது
பாராட்டுகள்//

கோபம் குறைவுதான்...ஆதங்கம் நிறைய....நன்றி...நண்பா...

-----------

//Blogger க. தங்கமணி பிரபு said...
தூள் கிளப்பல் பாலாஜி!//

வாங்க தங்கமணிசார் நன்றி உங்களின் வருகைக்கு..

-----------

//Blogger வால்பையன் said...
எவ்ளோ பெரிய மேட்டர் இது!//

மிக்க நன்றி அண்ணா...

-----------

க.பாலாசி said...

//அது சரி said...
மறுபடியும் பள்ளிகொண்டார் பகவான்...
:0))
நல்லா இருக்குங்க பாலாஜி!//

நன்றி அதுசரி....

ஆமா, அது என்ன அதுசரி...

//Blogger பிரியமுடன்...வசந்த் said...
நறுக்
எல்லாகவிதைகளும் உணர்ச்சிகரமா இருக்கு பாலாஜி தொடர்ந்து இதுமாதிரி எழுத வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி தோழரே....முயற்சிக்கிறேன்...

//Blogger சந்ரு said...
அசத்தல்....
அத்தனையும் அருமை//

நன்றி நண்பா....

//Blogger பழமைபேசி said...
இனி இதை மாத்திடுங்க என்ன? அதான்,//

அப்டிங்கறீங்களா...வேண்டாம் விடுங்க...

//’நச்’ கவி பாலாஜின்னு அறியப்படுகிறவர் ஆயிட்டீங்களே??//

இப்டி உசுப்பேத்தியே நம்மள பெரிய ஆளாக்கிடறாங்கப்பா...

மிக்க நன்றி அன்பரே...தங்களின் மறு வருகைக்கு...

க.பாலாசி said...
This comment has been removed by the author.
க.பாலாசி said...

//ஹேமா said...
அத்தனையும் நல்லா இருக்கு.
பாலாஜி,இந்த வரிகள் நிறையப் பிடிச்சிருக்கு.தொடருங்கள்.//

நன்றி சகோதரியே...உங்களின் வருகை மற்றம் கருத்திற்கு...

------------

//Blogger சின்ன அம்மிணி said...
தன்னிடம் வாங்கினதைத்தான் மகளுக்கு தந்தார் என்ற நினைப்பும் காரணமாய் இருக்கலாம்.//

இருக்கலாம்....

//அத்தனை கவிதைகளும் அசத்தல்//

நன்றி ஆஸ்திரேலியா அக்கா...தங்களின் முதல்வருகை மற்றும் கருத்திற்கு...

க.பாலாசி said...

கதிர் - ஈரோடு said...
வாழ்த்துகள் பாலாஜி
இளமை விகடனின் குட் பிலாக் பகுதியில் "கதம்பம்"
வாழ்த்துகள்
மகிழ்ச்சி//

நன்றி...இது என்னுடைய முதல் முயற்சி...இதிலேயே வெற்றி என்பது கொஞ்சம் மகிழ்ச்சியாகதான் உள்ளது..இதை தங்களின் மூலம் அறிந்துகொள்ள நேர்ந்தது என் பாக்கியம்..

//Blogger ஆரூரன் விசுவநாதன் said...
கலக்கறீங்க பாலாஜி.....
கல்யாணத்துக்கு முன்னயே இப்படி அனுபவிச்சு எழுதறீங்க.....ம்ம்ம் இன்னும் கல்யாணம் ஆனப்பறம் எப்படில்லாம் எழுதுவீங்க....... வாழ்த்துக்கள்//

நன்றி அன்பரே...கல்யாணத்துக்கு அப்பறம் வீட்டுக்காரம்மா எழுதவுட்டா பாத்துக்கலாம்....

க.பாலாசி said...

//Sadagopal Muralidharan said...
சமூகத்தின் மீது உங்கள் கோபப்பார்வை மிக அழுத்தமாக விழுந்திருக்கிறது.
நல்ல சிந்தனையும் அதைச்சார்ந்த கவிதையும் மனதை காயப்படுத்தியது உண்மை.தொடர்க உங்கள் பணி. இது ஒரு நல்ல பாணி. இவையெல்லாம் சொல்லும் நாம் நமது சமூகத்திற்காக என்ன செய்திருக்கிறோம் என்று யோசிக்கவேண்டும். ஏதாவது செய்ய முயற்சிக்கவேண்டும். அப்போது தான் நாம் எழுதும் எழுத்துக்கும், மனது ஏங்கும் ஏக்கத்திற்கும் ஒரு சரியான தீர்வாக (அது சிறிதாக இருந்தாலும்) அமையும்.நீங்கள் எதுவும் செய்யவில்லை, செய்ய முயற்சிக்கவில்லை, செய்து கொண்டிருக்கவில்லை என்று நான் செல்வதாக தயவு செய்து நினைக்க வேண்டாம். இவை அனைவருக்குமாக பகிர்ந்த வார்த்தைகள்.//

கண்டிப்பாக தங்கள் கருத்தினை நான் ஏற்கிறேன்...முயன்றவரையில் ஒரு சிந்தனை நம் மனதினில் அல்லது நாவினில் பதிய பதிய அது போலவே நாம் வாழ ஆரம்பித்துவிடுவோம்...அதுபோலவே நானும் இந்த சமுதாயத்தில் நல்லவனாக வாழ கற்றுக்கொண்டிருக்கிறேன்...
வாழ்ந்தும்கொண்டிருக்கிறேன்...(முயன்றவரையில்)

கார்த்திக் said...

/* 4 லட்சம் பட்டதாரிகள்
4000 ரூபாய் சம்பளத்திற்கு காத்திருக்கும் வேளை...
போராட்டத்தில் பொழுதை போக்குபவர்களுக்கு...
15 ஆயிரம் +++ போதவில்லையாம்... */

அருமை.. 4000 கூட இல்லை.. 2500 தான்..

shortfilmindia.com said...

short and sweet
cablesankar

க.பாலாசி said...

// கார்த்திக் said...
அருமை.. 4000 கூட இல்லை.. 2500 தான்..//

நன்றி நண்பா...

//Blogger shortfilmindia.com said...

short and sweet
cablesankar//

நன்றி கேபிளய்யா....

சப்ராஸ் அபூ பக்கர் said...

////தலைவரின் பிறந்தநாளில்
அன்னதான திட்டமாம்...அதற்கு
அயராது உழைக்கும் தொண்டன்...
பட்டினியில் பிள்ளை குட்டிகள்...///

சிந்திக்க வைக்கும் உங்கள் சிந்தனை பிரமாதம்.....

வாழ்த்துக்கள்... அருமையாக இருந்தது.....

ஆ.ஞானசேகரன் said...

கதம்பத்தில் எல்லாப்பூக்களுமே அருமை... வாழ்த்துகள் நண்பா

க.பாலாசி said...

//சப்ராஸ் அபூ பக்கர் said...
சிந்திக்க வைக்கும் உங்கள் சிந்தனை பிரமாதம்.....
வாழ்த்துக்கள்... அருமையாக இருந்தது.....//

மிக்க நன்றி நண்பா...

//Blogger ஆ.ஞானசேகரன் said...
கதம்பத்தில் எல்லாப்பூக்களுமே அருமை... வாழ்த்துகள் நண்பா//

நன்றி அன்பரே...உங்களின் வருகை மற்றும் வாழ்த்துதலுக்கு....

"உழவன்" "Uzhavan" said...

கதம்பம் மணக்கிறது நண்பா.. யூத் விகடனுக்கு வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

//" உழவன் " " Uzhavan " said...
கதம்பம் மணக்கிறது நண்பா.. யூத் விகடனுக்கு வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி அன்பரே...

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO